• Thu. Apr 18th, 2024

ரயில் கட்டணம் 15% குறையும்..!

Byகாயத்ரி

Nov 17, 2021

நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பி, கட்டணம் 15% வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.


இதையடுத்து விரைவில் ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என்று ரயில்வே துறை அறிவித்திருந்தது. கொரோனா காலத்தில் வழக்கமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டால் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது.


இந்நிலையில் மீண்டும் வழக்கமான ரயில்கள் இயக்கப்படுவதால் கட்டணமும் பழைய விகிதத்திற்கு மாற்றப்படுகிறது. இதனால் ரயில் கட்டணம் 15 சதவீதம் வரை குறையும் என தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் ரயில்களில் சமைத்த உணவுகளை பரிமாற தடை மற்றும் உயர்த்தப்பட்ட நடைமேடை கட்டணம் ஆகியவை தொடரும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *