• Sat. Apr 1st, 2023

நேர்த்திக்கடனின்போது சோகம்! ஆட்டை பிடித்திருந்தவர் தலையை வெட்டியதால் பரபரப்பு…

ஆந்திரா மாநிலத்தில் ஆடு பலியிடுதலில் ஒரு துயர சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வலசப்பள்ளி கிராமத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு ஊர் எல்லையில் உள்ள கிராம தேவதைக்கு ஆடு, கோழி ஆகியவற்றை பலி கொடுக்கப்பட்டது.

ஆடுகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த சலபதி என்பவர் நன்றாக மது அருந்தி முழு போதையில் இருந்தார். நள்ளிரவு 12 மணி அளவில் நடைபெற்ற இந்த பலிகொடுக்கும் நிகழ்வின் போது போதையில் இருந்த சலபதி ஆடு என நினைத்து ஆட்டை பிடித்துக்கொண்டிருந்த சுரேஷ் தலையை ஆடு வெட்டும் கத்தியால் ஓங்கி வெட்டினார். இதனால் படுகாயம் அடைந்த சுரேஷ் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

அங்கிருந்தவர்கள் உடனடியாக சுரேசை மீட்டு மதனப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். ஆபத்தான நிலையில் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்..

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள மதனபள்ளி போலீசார் ஆடு என்று நினைத்து சுரேஷ் தலையை வெட்டிய சலபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *