புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் ஆடு விற்பனை படுஜோர் கடந்த வாரத்தை விட ஆடுகளுக்கு 500 முதல் 1500 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இன்று நடைபெறும் ஆட்டுச் சந்தையில் 2 கோடி வரை வர்த்தகம் நடைபெறும் என மகிழ்ச்சியுடன் வியாபாரிகள் தெரிவித்தனர்.

தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசுகள் புத்தாடை உள்ளிட்டவைகளுக்கு அடுத்தபடியாக வீடுகளில் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பிறகு குடும்பத்துடன் மாமிச உணவுகளை சாப்பிடுவது வழக்கம் அதிலும் குறிப்பாக ஆட்டு இறைச்சி அதிக அளவில் பொதுமக்கள் வாங்கி சமைத்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகைக்காக ஆடுகளின் விலை அதிகரித்து வரும் அதே போல் இந்த வருடமும் வருகின்ற திங்கட்கிழமை தீபாவளி முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை தீபாவளி வார சந்தை நடைபெற்றது இந்த வார சந்தையில் புதுக்கோட்டை ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து செம்மறி ஆடு வெள்ளாடு என 3000 மேற்பட்ட ஆடுகள் தற்பொழுது விற்பனைக்கு வந்து இறங்கி உள்ளது மேலும் டாட்டா ஏசி வாகனத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ஆடுகளை இறக்கும்போது வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த மாதம் புரட்டாசி மாதம் என்பதால் ஆடுகள் வாங்குவதற்கு வியாபாரிகள் வராததால் விலைகள் சற்று குறைந்தே இருந்த நிலையில் தற்போது தீபாவளி பண்டிகை என்பதால் இன்று நடைபெறும் ஆட்டு சந்தையில் ஆடுகளின் விலை அதிகரித்துள்ளது. என்றும் சென்ற வாரத்தை விட இந்த வாரம் ஆடுகளுக்கு 500 முதல் 1500 ரூபாய் வரை கூடுதலாக விற்பனை ஆகிறது என்றும் தெரிவித்தனர். மேலும் இன்று நடைபெறும் ஆட்டு சந்தையில் ஒன்றரை கோடி முதல் 2 கோடி வரை வர்த்தகம் நடைபெறும் எனவும் வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.