• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சுற்றுலாபயணிகள் அருவியில் குளிப்பதற்கு அனுமதி..,

BySubeshchandrabose

Oct 6, 2025

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளான மேகமலை வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கோம்பைதொழு அருகே வனப்பகுதியில் அமைந்துள்ள மேகமலை அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்ததால் சுற்றுலாபயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் கடந்த இரண்டு நாட்களாக தடை விதித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து தண்ணீர் வரத்து சீராகி உள்ளதால் இன்று முதல் சுற்றுலாபயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.

இதையடுத்து ஆர்ப்பரித்து விழும் அருவி நீரில் குளிப்பதற்காக தேனி மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாபயணிகள் அருவிக்கு படையெடுத்து வருகின்றனர்.