- உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டம் எதிர்பாராத விதமாக வன்முறையாக மாறியது. இதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
- உ.பியில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்க சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கைது மற்றும் அவரை தங்க வைக்கப்பட்டிருக்கும் அறையை அவரே சுத்தம் செய்யும் பிரியங்காவின் காணொளி வெளியாகி சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
- நீட் விலக்கு தொடர்பாக, பாஜக ஆட்சியிலில்லாத மற்றும் தமிழக கருத்துடன் ஒத்துப்போகும் கருத்துடைய 12 மாநில முதல்வர்களுக்கு, அவர்களின் ஆதரவை கேட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
- ‘பண்டோரா பேப்பர்ஸ்’ வெளிநாடுகளில் முறைகேடாக, சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ள பிரபலங்களின் பட்டியல் வெளியிட்டது.
கிரிக்கெட் வீரர் சச்சின், தொழிலதிபர்கள் அனில் அம்பானி மற்றும் நீரவ் மோடி உட்பட மொத்தம் 380 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. சச்சின் தரப்பு இதை மறுத்துள்ளது. - மருத்துவத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு இந்தாண்டு வழங்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஜூலியஸ், ஆர்டம் பட்டாஹவுடியன் ஆகிய இரு விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத’ திரைப்படத்தில் எஸ்.பி. பாலசுப்ரணியம் அவர்கள் பாடிய பாடல் அண்ணாத.. அண்ணாத.. பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
7.பால்வளத்துறையில் பணியிட மாற்றம், புதிய நியமனங்களுக்கு இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என அத்துறையின் அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில், வருகிற 6ஆம் தேதி நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தலில் வாக்கு சேகரிப்புக்கான கால அவகாசம் இன்று மாலையுடன் முடிவடைந்தது.
9.நீலகிரி மாவட்டம் மசினகுடி மற்றும் சிங்காரா வனப்பகுதியில் சுற்றி திரியும் ஆட்கொல்லி புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் காட்டுக்குள் சென்று தீவிரமாக தேடிவருகின்றனர்.
- ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கான், போதை மருந்து வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார். தற்போது ரசிகர்கள் #WeStandWithSRK என்ற ஹேஷ்டாக் மூலமாக ஷாருக்கான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாக ட்விட்டரில் ஆதரவு பெருகி வருகிறது.