திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே விலை வீழ்ச்சியால் சாலையோரம் கொட்டப்படும் தக்காளிகளால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பூக்கள், காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தற்போது தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி விலை கடுமையான சரிவை சந்தித்து கிலோ ரூ.10-க்கு விற்பனையாகிறது. போதிய விலை கிடைக்காமல் விவசாயி தக்காளியை பயிரிட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டி அருகே சாலையோரத்தில் கொட்டி சென்றுள்ளனர். இந்த சம்பவம் வெறும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து விவசாயி ஒருவர் தெரிவிக்கையில்:
தக்காளி விலை அதிகமாக இருந்தால் அதிக அளவு தக்காளி பயிரிட்டேன்.
தற்போது 15 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.100-க்கு குறைவாக விற்பனை ஆவதால் பராமரிப்பு செலவுகள், தக்காளி பறிப்பு கூலி, ஏற்றி இறக்கும் கூலிக்கு கூட கட்டுபடியாகவில்லை என்று கவலையுடன் தெரிவித்தார்.