திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கி வரும் கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் அதிகரித்திருப்பது, வாகன ஓட்டிகளை அதிருப்திக்குள்ளாக்கியிருக்கிறது.
கொடைக்கானலுக்கு வருகை தரும் வாகனங்களுக்கு நகராட்சி சார்பில் சுங்ககட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது, நெடுஞ்சாலை துறை மற்றும் துறைமுகங்கள் துறையின் கீழ் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
சுற்றுலா பேருந்துக்கு ரூபாய் 250, பேருந்துக்கு ரூபாய் 150, கனரக வாகனங்களுக்கு ரூபாய் 100, வேன், மினி லாரி மற்றும் டிராக்டர் போன்ற வாகனங்களுக்கு ரூபாய் 80 மற்றும் சுற்றுலா வாடகை சிற்றுந்து ஆகியவற்றிற்கு ரூபாய் 60 என சுங்க கட்டணம் தற்போது வசூலிக்கப்பட்டுள்ளது.