• Tue. Feb 18th, 2025

அனைவரும் ஒன்று சேர்ந்து பாஜகவை தோற்க்கடிப்போம் – சீறிய மம்தா பானர்ஜி!

2024ம் ஆண்டு நடைபெறவுள்ள பொது தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. அதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்து ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் சில மாநிலத்தில் போட்டியிட்டது.

மேற்கு வங்கத்தின் கொல்கத்தா நகரில் மாநில குழு கூட்டம் இன்று நடந்தது. இதில், மம்தா பானர்ஜி பங்கேற்று உரையாற்றினார். இதில், ”நாம் சுறுசுறுப்புடன் செயலாற்ற வேண்டும். வருகிற 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள பொது தேர்தலில் பாஜக.வை தோற்கடிப்பதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். பாஜக – வினர் கலகக்காரர்கள். அது ஓர் ஊழல் கட்சி. ஜனநாயகத்தினை அழிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்.

இந்த கூட்டத்தில் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டார். கடந்த சில தினங்களுக்குமுன் பிரசாந்த் கிஷோர் மற்றும் மம்தா பானர்ஜிக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், அதனால் பிரசாந்த் கிஷோர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு செய்துவரும் வேலையில் இருந்து விடுபடுவார் என்றும் கருத்து நிலவியது. ஆனால், இந்த பொதுக்கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டு அதை பொய் என நிரூபித்துள்ளார்.

இன்று நடந்த கூட்டத்தில், பாஜக-வில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்ட ஜெய் பிரகாஷ் மஜும்தார் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். கடந்த ஜனவரி மாதம் பாஜக-வுக்க்கு எதிராக பேசியதாக ஜெய்பிரகாஷ் மீது குற்றம்சாட்டப்பட்டு அவர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பாஜகவின் மாநில துணைத்தலைவராக இருந்த தன்னை கட்சி நீக்கியதும், திரிணாமுல் கட்சியில் இணைந்துள்ளார்.

கோவா மாநில சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் களமிறங்கியது. அதேநேரம், உத்தரப்பிரதேசத்தில் களம் இறங்காமல், சமாஜ்வாதி கட்சிக்கு பிரசாரம் செய்தது. உத்தரப்பிரதேசத்தில் மம்தா பானர்ஜி பிரசாரம் செய்தபோது, ‘சில விஷயங்களுக்காக உபி தேர்தலில் போட்டியிடவில்லை’ என தெரிவித்தார். அப்போதே, இது நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து தான் மம்தா செயல்படுவதாக பேச்சு எழுந்தது. இந்நிலையில் 2024 தேர்தலில் அனைவரும் ஒன்றுபடுவோம் என்று கூறியுள்ளார் மம்தா. பெரிய கூட்டணியை மனதில் வைத்தே மம்தா இவ்வாறு கூறியுள்ளார்.