• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இன்று பௌர்ணமி : சதுரகிரி கோவிலில் தரிசனத்திற்கு அனுமதி

Byவிஷா

Feb 23, 2024

இன்று மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் நாளை வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள சதுரகிரி மலையின் மீது உலக பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வனப்பகுதியில் மலை மேல் அமைந்துள்ளதால், இறைவனை தரிசனம் செய்ய மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு மலையேறி சென்று வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
இன்று மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், சதுரகிரி மலையேறி சென்று வழிபட பக்தர்கள் நாளை பிப்ரவரி 24ம் தேதி வரை அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பாராத விதமாக கனமழை, இயற்கை சீற்றங்கள் இருந்தால் பக்தர்கள் தரிசனம், மலை ஏறுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என வனத்துறை சரகம் அறிவித்துள்ளது. மலையேறும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி தற்போது மலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும் நிலையில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு வர தடை
இரவில் மலை மேல் தங்குவதற்கு தடை. மலை மேல் உள்ள சுனைகளில் குளிக்க தடை என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன