• Tue. Apr 30th, 2024

உலகில் முதன் முதலில் லைக்கா என்னும் நாயை சோவியத் ஒன்றியம் ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் விண்வெளிக்கு அனுப்பிய தினம் இன்று (நவம்பர் 3, 1957)…

ByKalamegam Viswanathan

Nov 3, 2023

லைக்கா (Laika), என்ற நாய், சோவியத் ஒன்றியம் முதன் முதலில் விண்ணுக்கு அனுப்பிய உயிரினமாகும். ஒரு காலத்தில் மாஸ்கோவின் வீதிகளில் திரிந்த இந்நாய், நாய்கள் சரணாலயம் ஒன்றிலிருந்து விண்வெளிப் பயணப் பயிற்சிக்காக வேறு இரண்டு நாய்களுடன் தெரிந்தெடுக்கப்பட்டது. இதன் இயற்பெயர் “குதிரியாவ்க்கா” (Kudryavka) என்பதாகும். பயிற்சிக்காலம் முடிந்த பின்னர் சோவியத்தின் ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் பூமியின் சுற்றுப்பாதையைச் சுற்றிவர லைக்கா தேர்ந்தெடுக்கப்பட்டது. லைக்கா நவம்பர் 3 1957ல் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. முதன்முதலாக விண்வெளிக்குச் சென்று பூமியைச் சுற்றிய விலங்கு லைக்கா (Laika) என்கிற பெண் நாயாகும். சோவியத் ரஷ்யா 1957ஆம் ஆண்டு நவம்பர் 3 அன்று ஸ்புட்னிக்–2 என்கிற விண்கலத்தின்மூலம் லைக்கா என்கிற நாயை விண்வெளிக்கு அனுப்பி வெற்றி கண்டது. இதன்மூலம் எடையற்ற தன்மையிலும் விலங்குகள் உயிர் வாழ முடியும் என்பது நிரூபிக்கப்பட்டது.

ஸ்புட்னிக்-2 புவிச் சுற்றுப்பாதைக்கு ஏவப்பட்ட இரண்டாவது விண்கலம் ஆகும். 1957 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் நாள் சோவியத் ஒன்றியத்தினால் ஏவப்பட்ட இவ்விண்கலத்தில் லைக்கா என்னும் பெயருடைய நாய் ஒன்று ஏற்றிச்செல்லப்பட்டது. ஒரு விண்கலத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட முதல் உயிருள்ள விலங்கு இதுவாகும். இக்கலம் 4 மீட்டர் (13 அடி) உயரமும், 2 மீட்டர் (6.5 அடி) அடி விட்டமும் கொண்ட ஒரு கூம்பு வடிவம் கொண்டது. இது பல ஒலிபரப்பி, தொலைஅளவைத் தொகுதி, கட்டுப்பாட்டு மையம், வெப்பநிலைக் கட்டுப்பாட்டுத் தொகுதி, பல அறிவியற் கருவிகள் ஆகியவற்றைக் கொண்ட பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இன்னொரு மூடப்பட அறையில் லைக்கா வைக்கப்பட்டது. பொறியியல், உயிரியல் ஆகியன தொடர்பான தரவுகள் டிரால் டி என்னும் தொலையளவுத் தொகுதியால், ஒவ்வொரு சுற்றுக்கும் 15 நிமிட காலம் தரவுகள் புவிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. சூரியக் கதிர்வீச்சையும், அண்டக் கதிர்வீச்சையும் அளப்பதற்காக இரண்டு ஒளிமானிகள் கலத்தில் இருந்தன.

லைக்கா என்கிற நாய் ஒரு பகுதி டெரியர் (Terrier) என்னும் இனத்தைச் சேர்ந்தது. அது 6 கிலோ எடை கொண்டது. அதற்கு 20 நாட்கள் பயிற்சி கொடுத்த பின்னரே விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. அது வாழ்வதற்கு ஏற்ப ஆக்ஸிஜனும், குடிக்க நீரும், பசை வடிவில் உணவும் வைக்கப்பட்டிருந்தது. கழிவுகள் வெளியேறுவதற்கான வசதிகளும் இடம் பெற்றிருந்தன. லைக்காவின் நடவடிக்கைகளை பூமியிலிருந்தே கண்காணிக்கப்பட்டது. லைக்கா 10 நாட்கள் உயிருடன் இருந்தது. விண்வெளிப் பயணத்திற்காக உயிர்த்தியாகம் செய்தது. விண்கலத்தை பூமிக்கு திரும்பும் வசதி அப்போது இல்லாத காரணத்தாலேயே அழுத்தம் மற்றும் வெப்பமிகுதி காரணமாக லைக்கா விண்வெளியிலேயே இறந்துபோனது. லைக்கா இறந்தததன் காரணம் இது இறந்து பல ஆண்டுகள் கழித்தே அறிவிக்கப்பட்டது. சில முன்னாள் சோவியத் அறிவியலாளர்கள் லைக்கா இறக்க விடப்பட்டது எனக் கருத்துத் தெரிவித்தனர். லைக்காவிற்கான சிலை 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று மாஸ்கோவில் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. லைக்கா இப்பயணத்தின் போது இறந்தாலும், உயிரினம் மட்டுமல்லாமல் மனிதர் விண்ணுக்குச் செல்லுவதற்கு இச்சோதனை வழிவகுத்தது.

Related Post

“சதி”ஒழிப்பு தினம் தான் இன்று!
SK23 படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *