• Fri. May 10th, 2024

முதன் முறையாக நைட்ரஜனை (Nitrogen) திரவமாக்கிய சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் ரவுல் பியேர் பிக்டே நினைவு தினம் இன்று (ஜுலை 27, 1929).

ByKalamegam Viswanathan

Jul 27, 2023

ரவுல் பியேர் பிக்டே (Raoul Pierre Pictet) ஏப்ரல் 4, 1846ல் சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் பிறந்தார். ஜெனீவா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவரது ஆய்வுகள் பெரும்பாலும் குறைந்த வெப்பநிலைகளைப் பெறுதலிலும், வளிமங்களைத் திரவமாக்குவதிலும், திண்மமாக்குவதிலும் இருந்தன. டிசம்பர் 22,1877ல் பாரிசில் உள்ள அறிவியல் கழகத்திற்கு ஜெனீவாவில் இருந்து பிக்டே அனுப்பியிருந்த ஒரு தந்தியில் பின்வருமாறு குறிக்கப்பட்டிருந்தது. சல்பூரசு மற்றும் கார்போனிக் காடிகளைப் பயன்படுத்தி 320 வளிமண்டல அழுத்தத்திலும், 140 பாகை குளிரிலும் இன்று ஆக்சிசன் திரவமாக்கப்பட்டது. இவ்வறிவிப்பு வெளியிடப்பட்ட அதே காலகட்டத்தில் பிரான்சைச் சேர்ந்த லூயி பால் காயில்டேட் என்பவர் முற்றிலும் வேறான முறையொன்றில் ஆக்சிசனைத் திரவமாக்கியிருந்தார். இவரே முதன் முறையாக நைட்ரஜனை வெற்றிகரமாகத் திரவமாக்கியவர்.

திரவ நைட்ரஜன் (liquid nitrogen) என்பது மிகவும் குறைந்த வெப்பநிலையில் திரவ நிலையில் இருக்கும் நைட்ரஜன் ஆகும். இது ஒரு நிறமற்ற தெளிவான திரவம் ஆகும். இதன் கொதிநிலையில் (−195.79 °C ) அடர்த்தி 0.807 கி/மிலி ஆகும். தொழில்முறையில் இது திரவக் காற்றை பகுதிபடக் காய்ச்சி வடித்தலின் மூலம் உருவாக்கப்படுகிறது. திரவ நைட்ரஜன் பொதுவாக LN2, “LIN” அல்லது “LN” ஆகிய சுருக்கக் குறியீட்டினால் குறிப்பிடப்படுகிறது. திரவ நைதரசன் ஒரு ஈரணுத் திரவம் ஆகும். அதாவது திரவமாக்கலின் போது N2 வளிமத்தின் N சகப் பிணைப்பின் ஈரணு இயல்பு மாற்றமடையாமல் இருக்கும்.

எரிபொருள் வழங்கும் நிலையங்களில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு டயர்களில் காற்றுக்கு பதிலாக நைட்ரஜன் வாயுவை நிரப்பும் பணியை ஆரம்பிதுள்ளது. நைட்ரஜன் வாயுவை நிரப்புவதால் வாகனங்களின் மைலேட்ஜ் கூடுதலாக கிடைக் கும்.டயர்களை குறைந்த வெப்பநிலையில் இருக்கச்செய்யும். டயர்களின் ஆயுட்காலம் கூடும். அடிகடி டயர்களின் காற்றழுத்தை சோதிக்க தேவையில்லை. முதன் முறையாக நைட்ரஜனை (Nitrogen) திரவமாக்கிய ரவுல் பியேர் பிக்டே ஜூலை 27, 1929ல் தனது 83வது அகவையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Related Post

“சதி”ஒழிப்பு தினம் தான் இன்று!
SK23 படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *