• Tue. Mar 19th, 2024

இன்று உலக வன நாள் – புவியின் நுரையீரல்கள்” என அழைக்கப்படும் காடுகள்

ByKalamegam Viswanathan

Mar 21, 2023

புவியின் நுரையீரல்கள்” என அழைக்கப்படும் காடுகள், இன்று மனித செயற்பாட்டின் காரணமாக அழிவடைந்து வருகின்றன. இதன் காரணமாக புவியின் வெப்பநிலை அதிகரித்து பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றோம். வனங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தவும் மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் மார்ச் 21ல் உலக வன நாளாக கொண்டாடப்படுகின்றது. இயற்கை பல வகையான உயிரினங்களும், மரங்களும், செடிகளும், அதில் விதவிதமான மலர்கள், காய்கள், கனிகள் உயிரினங்கள், என்று காலகாலமாக பரிணாம வளர்ச்சியில் மாற்றங்கள் ஏற்பட்டு இயற்கை என்று சொன்னாலே மனம் மகிழ்ச்சி அடைய கூடிய வகையில் இயற்கைக் காட்சிகள் நமது உள்ளத்தை பூரிப்படைய வைக்கும் திறன் கொண்டது. இயற்கையுடனும், மற்ற உயிரினங்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பு, பரினாம் வளர்ச்சியில் மரபு வழியாக வந்த ஒரு இணைப்பு. மனிதர்கள் மன நிறைவு இல்லாமல் இருப்பதற்கும் காரணம் இயற்கையை விட்டு விலசி செயற்கையாக வாழ்வதே ஆகும்.

உலகில் 4 பில்லியன் ஹெக்டேர்கள் நிலப்பரப்பிற்கு காடுகள் காணப்படுகின்றன. அதாவது, புவி மேற்பரப்பில் 31% காடுகள் சூழ்ந்துள்ளன. உலகில் அதிக பரப்பளவில் வன வளத்தைக் கொண்ட கண்டம் தென் அமெரிக்க கண்டம் ஆகும். தனது நிலப் பரப்பில் அரைவாசிக்கும் அதிகமான காடுகள் காணப்படுகின்றன. உலகில் குறைந்த பரப்பளவில் வன வளத்தைக் கொண்ட கண்டம் ஆசியாக் கண்டம் ஆகும். தனது நிலப் பரப்பில் 20% காடுகள் காணப்படுகின்றன. உலகில் அதிகளவில் வன வளங்களைக் கொண்ட நாடுகள் ரஷ்யா, பிரேசில், கனடா, ஐக்கிய அமெரிக்கா, சீனா ஆசியனவாகும். உலசில் அரைவாசிக்கும் அதிகமான காடுகள் இந்த நாடுகளிலேயே காணப்படுகின்றன. உலக வனங்களில் 20% ரஷ்யாவிலேயே காணப்படுகின்றன.

புவி மேற்பரப்பில் 6% ஈரவலயக் காடுகள் சூழ்ந்துள்ளார். உலகிலுள்ள தாவர மற்றும் விலங்கினங்களில் அரைவாசிக்கும் அதிகமானவை இக்காடுகளிலேயே காணப்படுகின்றன. அண்டாடிக்கா கண்டம் தவிர்ந்த எனைய அனைத்து கண்டங்களிலும் ஈரவயைக் காடுகள் காணப்படுகின்றன. தென் அமெரிக்க ஈரவலயக் காடுகளில் 2000கும் அதிகமான வண்ணத்துப்பூச்சி இனங்கள் காணப்படுகின்றனவாம். மத்திய ஆபிரிக்க ஈரவலயக் காடுகளில் 8,000 இற்கும் அதிகமான தாவர இனங்கள் காணப்படுகின்றனவாம். உலகத்திற்கு தேவையான 20% ஆக்சிஜன் அமேசான் ஈரவலயக் காடுகளிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றது உலகில் 15 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தமது வாழ்வாரத்திற்கு காடுகளிலேயே தங்கியுள்ளனர். உலகில் 300 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காடுகளில் வாழ்கின்றனர். உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பங்கினர் தமது எரிபொருள் தேவையினை விறகுகள் மூலமே பூர்த்தி செய்துகொள்கின்றனர்.

இப்படி பட்ட இயற்கையை மனிதன் எப்படி சிதைக்கிறான் என்றால், உலகில் ஒவ்வொரு நிமிடமமும், கால்பந்தாட்ட மைதானத்தின் அளவான ஈரவலயக் காடுகள் அழிக்கிறான், உலகில் வருடாந்தம் 6 மில்லியன் ஏக்கர் நிலப்பரப்பிலான இயற்கை காடுகள் அழிக்கப்படுகின்றன. இது இங்கிலாந்து நாட்டின் பரப்பளவினை விடவும் பெரிதாகும். காசிதாதி உற்பத்திற்காக உலகில் 50% ஆன மரங்கள் அழிக்கப்படுகின்றன. உலசில் அதிகமான காட்டுக் க மனிகனாலேயே உருவாக்கப்படுகின்றன. நேற்றைய மரங்களை பாதுகாப்போம் இன்றைய மரங்களை பராமரிப்போம் நாளைய மரங்கண பதியமிடுவோம் – மரமொழி

நம்மை நம் சந்ததியினரை பாதுகாக்க இயற்கை நமக்கு தந்திருக்கும் பரறே மரங்கள், மரங்கள் வாய்மை கேட்டை குறைக்கும் தன்மை உடையன. நமது வாயு மண்டலத்தில் சுமார் 95 சதவிக் காற்று பமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் உயரம் வரை வியாபித்துள்ளது இந்த காற்று சூரிய கதிர்களின் தாக்கத்தால் எடை குறைந்து மேலும் உயரச் செல்லும். நமது சற்றுப்புற சீர்கேட்டால் காற்றில் கலந்துள்ள பலவகையான அசத்த வாயுக்களின் அடர்த்தியாலும் மாசுபடிவதாலும் காற்றினால் உயர எழும்பி செல்லும் நிலை குறைந்து வருகிறது. இதனால் தமியின் மேற்பரப்பு எளிதில் சூடாக வாய்ப்பு உள்ளது. பல்வேறு வகையான பசுந்தாவரங்கள், மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அரிய வாய்ப்பு உள்ளது. சுமார் ஆயிரம் கண்டுகளாக உருவான ஒரு அங்குல வளமான மேல்மன், சில ஆண்டுகளிலேயே வளம் குன்றிவிடுகிறது இயற்க்கையை நாம் அழித்தால் இயற்க்கை நய்மை அழித்துவிடும். இயற்கையை பாதுகாப்போம் நம் சங்கதியின் உயிருக்காக
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

Related Post

SK23 படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *