முதல் வெற்றிகரமான விமானத்தை உருவாக்கிய அமெரிக்க கண்டுபிடிப்பாளர் ரைட் சகோதரர், வில்பர் ரைட் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 16, 1867)
வில்பர் ரைட் ஏப்ரல் 16, 1867ல் மில்வில், இண்டியானாவில் கிறிஸ்துவப் பாதிரியார் மில்டன் ரைட், தாய் சூசன் ரைட் இருவருக்கும் பிறந்தார். இவரது சகோதரர் ஓர்வில் ரைட். இருவரும் விமானத்தைக் கண்டறிந்த முன்னோடிகளும் ஆவர். சாதாரணப் பொதுப் பள்ளிக்கூடத்தில்தான் இருவரும் படித்தவர்கள். தொடக்கப் பள்ளியில் படிக்கும்போது ஓர்வில் குறும்புத்தனம் செய்தார். அதற்காகவே ஒரு முறை அவர் பள்ளியைவிட்டு வெளியேற்றப்பட்டார். இருவரும் ஏனோ கல்லூரிப் படிப்புக்கு அனுப்பப்படவில்லை. சிறு வயதில் அவர்கள் அறிவாற்றல் துறைகளில் தொடரவும், ஒன்றில் ஆர்வம் எழுந்தால், அதை ஆராயும்படிப் பெற்றோர் ஊக்க மூட்டினர். சுயமாய்த் தனித்துச் சிந்தனை புரிவது, ஒரு கொள்கையைப் பின்பற்றிச் செயல்படுவது, போன்ற நற்குணங்கள் இவர்கள் தந்தையிடம் கற்றவை. இவ்விருவரும் திருமணமே செய்துகொள்ளவில்லை.
தந்தையிடம் கற்றதை விடத் தாயிடம், இருவரும் அறிந்து கொண்டது அதிகம். தாய் கல்லூரிக்குச் சென்று அல்ஜீப்ரா, ஜியாமிதி கற்றுக் கொண்டவள். பையன்களுக்குப் ‘பனிச் சறுக்கி எப்படி டிசைன் செய்வது என்று சொல்லிக் கொடுத்து, படத்தைத் தாளில் வரைய வைத்து, இருவரையும் பலகையில் செய்யக் கற்றுக் கொடுத்தவள் தாய். முதலில் தாளில் துள்ளியமாக வரைந்தால், பின்னல் அதைச் செய்யும் போது, முறையாக அமைக்கலாம் என்று சிறு வயதிலேயே சிறந்த செய்முறை வழியைப் புகட்டியவள் தாய். அதைப் பின்பற்றி இருவர் அமர்ந்து செல்லும் பனிச்சறுக்கி ஒன்றைப் பலகையில் செய்து, போட்டியில் கலந்து கொண்டு முதலாவதாகப் பனியில் சறுக்கி வெற்றியும் அடைந்தனர்.
ஒரு சமயம் தாயுடனும், தம்பியுடனும் டேடன் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற போது, பறவை ஒன்று வானிலிருந்து நீரில் பாய்ந்து, ஒரு மீனோடு மீண்டதைக் கண்டு, பதினொரு வயதுச் சிறுவன் வில்பர் பேராச்சிரியம் அடைந்தான். பறவை எப்படிப் பறக்க முடிகிறது, அம்மா? என்று வில்பர் கூர்மையாகக் கேட்டான். இறக்கைகளால் பறக்கிறது என்று கூறினாள் தாய். வில்பருக்குத் தாயின் பதில் திருப்தி அளிக்கவில்லை. எப்படி அம்மா? பறவை நீரில் பாயும் போதும், மீனோடு மேல் எழும் போதும், அதன் இறக்கைகள் அசையவே இல்லை அம்மா என்று தாயைக் குறுக்குக் கேள்வியில் மடக்கினான் வில்பர். தாயால் அவனுக்கு விளக்கம் தர முடியவில்லை. நமக்கும் இறக்கைகள் இருந்தால் நாமும் பறக்கலாம், இல்லையா அம்மா? என்றான் வில்பர். கடவுள் நமக்கு இறக்கைகள் அளிக்கவில்லை என்றாள் தாய். இறக்கைகளை நாமே தாயாரித்து மாட்டிக்கொள்ளலாம், அம்மா என்று தர்க்கத்தைப் பூர்த்தி செய்தான், வில்பர்.

1878ல் அவருடைய தந்தை சர்ச் ஆஃப் தி யுனைடெட் பிரெத்ரென் இன் கிறிஸ்ட்டில் ஆயராக இருந்தார். பணிநிமித்தமாக அவர் அடிக்கடி பயணம் செய்தார். அவ்வாறு ஒருமுறை அவர்தம் பயணத்தின்போது எலிகாப்டர் பொம்மை ஒன்றை அவ்விரு குழந்தைகளுக்கும் வாங்கிவந்தார். வான்வழி தொலையளவு முன்னோடியான அல்ஃபோன்ஸ் பேனாட் என்ற பிரஞ்சு நாட்டவரின் கண்டுபிடிப்பை அடிப்படையாகக்கொண்டு காகிதம், மூங்கில், கார்க்கு, இரப்பர் வளையம் ஆகியவற்றால் ஒரு அடி நீளத்திற்கு அப்பொம்மை செய்யப்பட்டிருந்தது. அது உடையும் வரை வில்பரும் ஓர்வில்லும் விளையாடினர். பிறகு அவர்களாகவே அதனை மீளமைத்தனர். அந்தப் பொம்மைதான் தங்களுக்கு பறப்பதற்கான ஆர்வத்துக்கான ஒரு தொடக்கப் பொறியாக இருந்தது என்று பிற்பாடு அவர்கள் தங்கள் அனுபவம் பற்றிச் சுட்டிக்காட்டினர்.
தம் யூகிப்பில், திறமையில் ஆழ்ந்த நம்பிக்கையும், தீர்மானமான முடிவில் தளராத உறுதியும் கொண்டவர்கள். ஏமாற்றம், ஏலாமை, இல்லாமை எதுவும் மனதைக் கலைக்காத விடாமுயற்சி. இரு பையன்களும் சிறு வயதிலிருந்தே பொறிநுணுக்க அறிவும், ஒப்பில்லாத இயந்திரச் செய்திறமையும் கொண்டிருந்தார்கள். தாமே படித்து அறிந்த ஞானத்துடன் முதலில் அச்சு இயந்திரங்களைப் (Printing Machines) புதிதாய் உருவாக்கி, உற்பத்தி செய்தார்கள். அடுத்து சைக்கிள் வண்டிகளை உருவாக்கி, உற்பத்தியும் செய்து விற்றார்கள். இந்த வர்த்தகங்களில் சேர்த்த பணத்தொகையே பின்னால் அவர்கள் விமானத் துறை ஆராய்ச்சிகளுக்கு மிகவும் உதவின. 1896ல் ஆக்டேவ் சனூட்ஸ் (Octave Chanutes) எழுதிய பறக்கும் இயந்திரங்களின் வளர்ச்சி (Progress in Flying Machines) வெளியீடுகளை, ஆழ்ந்து படித்து அறிந்ததுதான், அவர்களது அடிப்படையான ஆரம்பப் பாடம். அறுபது வயதான பிரென்ச் அமெரிக்கன், சனூட்ஸ் தன் சகாகக்களுடன் சிகாகோவுக்கு அருகில் மிச்சிகன் ஏரியின் மணற்பாங்கான தளத்தில், ஐந்து விதப் பொறியிலா ஊர்திகளை (Gliders) ஆயிரம் முறைக்கு மேல் பறக்க விட்டு முயன்றிருப்பவர். 1900ல் ரைட் சகோதரர்கள் டேடனில் தம் ஊர்திச் சோதனைகளை ஆரம்பித்த போது, சனூட்ஸ் அவரது ஆழ்ந்த தோழனாகி, அடிக்கடி கடிதம் எழுதித் தொடர்பு கொண்டிருந்தார்.

ரைட் சகோதரர்கள் விமானத் துறையில் அடி வைத்த காலம், அவர்கள் முன்னேறத் தகுந்த தருணமாக இருந்தது. 1896ல் தான் ஹென்ரி ஃபோர்டு தனது முதல் மோட்டார் காரைச் செய்தார். அப்போதுதான் டீசல் எஞ்சின், பெட்ரோல் எஞ்சின் புதிதாகத் தோன்றி வளர்ச்சி பெற்ற காலம். விமான நகர்ச்சி (Aerodynamics), கட்டமைப்புப் பொறித்துறை (Structural Engineering) ஆகிய பொறியியல் ஆக்க நுட்பங்கள் விருத்தியான காலம். இவற்றை எல்லாம் ஒன்றாய் இணைத்து வானத்தில் விமானத்தைப் பறக்க விடுவது, ரைட் சகோதரருக்கு ஓர் அரிய பெரிய வாய்ப்பாக அமைந்தது. ஜெர்மன் நிபுணர், ஆட்டோ லிலியென்தால் ‘பொறியிலா ஊர்தியில் வெற்றிகரமாய்ச் செய்த பல சோதனைகளை ஆழ்ந்து படித்த, வில்பர்தான் முதலில் பறக்கும் இயந்திரத்தில் மோக முற்றார். 1896ல் லிலியென்தால் தனது சோதனையின் போது, ஊர்தி கீழே விழுந்து மரணம் அடைந்தார்.

1899 ஆண்டு ஒரு சமயம், வில்பர் கழுகு பறப்பதை ஆழ்ந்து ஆராய்ந்த பின், விமானம் விழாமல் சீராய்ப் பறந்து செல்ல, மூன்று அச்சு முறையில் (Three Axes) இயங்கும் பொறியமைப்பு இருக்க வேண்டும், எனக் கண்டு பிடித்தார். அதாவது, முன் நகர்ச்சி (Thrust), மேல் எழுச்சி (Lift), திசை திருப்பி (Turning) ஆகிய ‘முப்புறக் கட்டுப்பாடு‘ என்ற புதிய பறப்பியல் நியதியைச் சிந்தித்து உருவாக்கினார். பறவையைப் போன்று, பறக்கும் இயந்திரம் பக்க வாட்டில் மிதக்க முடிய வேண்டும். மேலே உந்தி ஏறிச் செல்லவோ, கீழே இறங்கி நிற்கவோ இயல வேண்டும். இடப் புறமோ, வலப் புறமோ திரும்ப முடிதல் வேண்டும். தேவைப்பட்டால், இவற்றில் இரண்டு அல்லது மூன்று வித இயக்கங்களையும் ஒரே சமயத்தில் நிகழ்த்த வசதிகள் இருக்க வேண்டும். முன்னகர்ச்சிக்கு வலுவான பளுவற்ற எஞ்சின் தேவைப்பட்டது. எழுச்சி அளிப்பதற்கு ‘தூக்கிகள் (Elevators) வேண்டியிருந்தன. பக்க வாட்டில் திருப்ப திருப்பி (Rudder) வால்புறம் மாட்டப்பட்டது.
விமான இயக்கத்தில் ரைட் சகோதரருக்குப் ‘பறப்பியல் கட்டுப்பாடு ‘ (Flight Control) மிகப் பிரதானம் என்று தோன்றியது. கழுகு, பருந்துகள் உருளும் போது இறக்கைகள் சுழல்வதைக் கண்டார்கள். 1899ல் முதன் முதல் அவர்கள் சோதனை செய்த ‘இரு தளப் பட்டத்தில் (Bi-Plane Kite) சுழலும் இறக்கைகளை பிணைத்திருந்தார்கள். அவ்வாறு இறக்கைகளில் அமைத்ததால் விமானம் திரும்பிடும் போது, ஒருபுறம் எழுச்சி உயர்ந்தும், மறுபுறம் எழுச்சி இணையாகத் தாழ்ந்தும், காற்றை எதிர்த்துச் சீராகத் திரும்ப முடிந்தது. எஞ்சின் பொருத்திய முதல் விமானத்தை இயக்கியதோடு, முப்புற அச்சுக் கட்டுப்பாடுப் பொறியமைப்பைக் கண்டுப்பிடித்து வெற்றிகரமாய்ப் பயன்படுத்திப் பறப்பு இயந்திரவியலைச் (Aerodynamics) செப்பனிட்டுச் சிறப்பித்த பெருமை ரைட் சகோதரர்கள் இருவர்களுக்கு மட்டுமே சாரும்.
டிசம்பர் 17, 1903ல் 12 H.P. பெட்ரோல் எஞ்சின் கொண்ட ‘கிட்டி ஹாக் (Kitty Hawk) என்னும் Flyer பூமிக்கு மேல் முதலில் 12 வினாடிகள், கடைசியில் 30 mph வேகத்தில், 59 வினாடிகள் 852 அடி தூரம் பறந்தது. விமானத்தின் எடை 750 பவுண்டு. இறக்கையின் நீளம் 40 அடி 4 அங்குலம். சரித்திரப் புகழ் பெற்ற இந்தப் பயணத்தைச் செய்த முதல் வீரர், ஆர்வில் ரைட். பிறகு இரண்டு ஆண்டுகள் செம்மைப் படுத்தப்பட்டு, சிறப்பிக்கப்பட்டு, 1905ல் உலகின் முதல் பறக்கும் விமானம், Flyer III உருவானது. அது வானில் 38 நிமிடங்கள் நேரம் பறந்து, 24 மைல் கடந்தது. சிரமமின்றி எட்டாம் எண்போல் வட்ட மிட்டது, பக்க வாட்டில் திரும்பியது. 1908ல் ஐந்து மாதங்களில் வில்பர் மட்டும், 100 தடவைக்கும் மேல் 25 மணி நேரங்கள் பறந்து காட்டியிருக்கிறார். தொடந்து நீண்ட நேரம் பயணம் செய்தது, 2 மணி 20 நிமிடங்கள் பயணம் தடைப் பட்டதற்குப் பெரும்பான்மையான காரணம், எஞ்சினில் பெட்ரோல் தீர்ந்து போனதுதான், எஞ்சினும் சிறியது, பெட்ரோல் கலனும் சிறியது.
1909ல் அமெரிக்கா செப்பனிடப்பட்டு சீர் செய்யப்பட்ட முதல் யுத்த விமானத்தை ரைட் சகோதரர் உதவியில் தயார் செய்து உலகிலே முதன்மையானது. திருமணம் செய்து கொள்ளாமல், வாழ்நாள் முழுதும் விமானத்துறைப் படைப்புக்கே தங்களை அர்ப்பணித்த பிரம்மச்சாரி வில்பர் ரைட் 1912ல் ஒரு முறை தொழில்முறைப் பயணமாகப் போஸ்டன் சென்றிருந்த போது உடல்நலக் குறைவு ஏற்பட்டது. டேய்டனுக்குத் திரும்பிய பிறகு டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். நோயின் தீவிரத்தால் தன்நினைவின்றி பல நாட்கள் இருந்தார். மே 30 , 1912ல் தனது 45வது அகவையில் தமது இல்லத்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
- புதிய நாடாளுமன்ற கட்டிடம்… சு.வெங்கடேசன் எம்.பி. அதிர்ச்சி தகவல்புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு ஆலோசனை கூட்டத்திற்கு சென்ற மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் நாடாளுமன்ற கட்டிடம் குறித்த […]
- பள்ளிகள் திறப்பு- சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவுகோடை விடுமுறை முடிந்து ப ள்ளிகள் வரும் 7 ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் […]
- மேயர், ஆணையாளரின் உருவப்பொம்மைக்கு சால்வை அணிவித்து வரவேற்ற பெண் கவுன்சிலர்மதுரை மாநகராட்சி 20ஆவது வார்டு பகுதியில் மேயர் ஆணையாளரின் உருவப்பொம்மைகள் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு – […]
- சதுரகிரிமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது..விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை […]
- கோகுல்ராஜ் கொலை வழக்கு..யுவராஜூக்கு சாகும் வரை ஆயுள்ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் […]
- ஜூன் 9ல் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைகுழு கூட்டம்..!தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் வரும் 9ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த […]
- போக்குவரத்து விதிமீறல்களை கண்டுபிடிக்க நவீன வாகனம் அறிமுகம்..!
- பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..!டெல்லி வளர்ச்சி ஆணையம் ஆனது பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]
- தென்காசி அருகே பிட்பாக்கெட் அடித்த மூதாட்டி கைதுதென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையத்தில் பிட்பாக்கெட் அடித்த மூதாட்டியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.புளியங்குடியில் இருந்து […]
- கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினை வெளியீடுகலைவாணர் அரங்கில் நடைபெறும், நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினையை மேற்கு வங்க மாநில […]
- நீங்கள் எப்போதும் ராஜாதான்..! ” – முதலமைச்சர் வாழ்த்துஎங்கள் இதயங்களில் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து!” – முதல்வர் ஸ்டாலின் இளையராஜவுக்குபிறந்த […]
- ஆசிரியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்..!தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு இனி தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 178: ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்னதோடு அமை தூவித் தடந் தாள் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 445சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்பொருள் (மு.வ):தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் […]