• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி..!

Byவிஷா

Sep 30, 2023

நாட்டில் 2000ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான ரிசர்வ் வங்கி விதித்த காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.
இந்தியாவில் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் புதிதாக 2ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதற்கிடையே 2ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் புழக்கத்தில் உள்ள நோட்டுகளை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மாற்றிக்கொள்ளலாம் எனவும் கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தங்களிடம் இருந்த 2ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொண்டனர். இதற்காக வங்கிகள் சிறப்புக் கவுண்டர்களையும் திறந்து வைத்திருந்தன. இந்த நிலையில், இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 93சதவீத 2ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதாக கடந்த 1ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதற்கிடையே ரிசர்வ் வங்கி வழங்கிய காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.