

தொடர் விடுமுறை மற்றும் புரட்டாசி 2வது சனிக்கிழமையையொட்டி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கூட்டம் அலைமோதுகிறது.
இதனால் வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸில் அனைத்து அறைகளும் கூட்டம் நிரம்பி வழிவதுடன், பிரசாத ஸ்டால்களிலும் பக்தர்கள் லட்டு வாங்குவதற்காக காத்திருக்கின்றனர். திருப்பதி பேருந்து நிலையம் எதிரே உள்ள ஸ்ரீநிவாசம் தங்கும் விடுதி மற்றும் ரெயில் நிலையம் அருகே உள்ள விஷ்ணு நிவாஸ் ஆகிய கவுண்டர்களில் இலவச தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன் வழங்கப்படுகிறது. இதனைப் பெற பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

