• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

எழுத்தாளர் நா.பார்த்தசாரதி காலமான தினம் இன்று!

Byகாயத்ரி

Dec 13, 2021

அறியப்படுபவர் நா.பார்த்தசாரதி.விருதுநகர் மாவட்டம், நரிக்குடியில், 1932 டிசம்பர் 18ல் பிறந்தார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் ‘தீபம்’ நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார்.

நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, தலையங்கம், பயணக் கட்டுரை என, 93 நுால்கள் எழுதியுள்ளார்.இவர் எழுதிய, ‘குறிஞ்சி மலர்’ மற்றும், ‘பொன் விலங்கு’ ஆகிய கதைகள், தனியார், டிவிக்களில், தொடர்களாக வெளி வந்துள்ளன. இவர் எழுதிய “சாயங்கால மேகங்கள்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது .

‘சமுதாய வீதி’ எனும் நெடுங்கதைக்காக, ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றார்.1969ல் காமராஜர் தலைமையில் செயல்பட்ட, ஸ்தாபன காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1987, டிச., 13ல் தன் 55வது வயதில் இயற்கை எய்தினார்.எழுத்தாளர் நா.பார்த்தசாரதி காலமான தினம் இன்று!