• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ஜி.ராமநாதன் காலமான தினம் இன்று!

Byகாயத்ரி

Nov 20, 2021

1910ல் திருச்சிக்கு அருகிலுள்ள பிச்சாண்டார்கோவில் எனும் ஊரில், பிறந்தவர், ஜி.ராமநாதன். சங்கீதம் முறையாக கற்றுக்கொள்ளவில்லை.

வெறும் கேள்வி ஞானம் தான். தன், 18வது வயதில், ‘பாரத கான சபா’ நாடகக்குழுவில் சேர்ந்து ஹார்மோனியம் கருவியை வாசித்தார். தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர். இசைமேதை என்றும், சங்கீதச் சக்கரவர்த்தி என்றும் அறியப்படுகிறார். சுருக்கமாக ஜிஆர் எனவும் வழங்கப்பட்டார்.

தமிழ்த் திரைப்பட உலகின் நட்சத்திர அந்தஸ்த்து பெற்ற எம். கே. தியாகராஜ பாகவதரின் திரைப்படங்கள், சேலத்தைச் சேர்ந்த மாடர்ன் தியேட்டர்ஸ் மற்றும் கோயம்புத்தூரின் சென்ட்ரல் ஸ்டுடியோஸ் போன்ற நிறுவனங்கள் தயாரித்த திரைப்படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் பெரிதும் அறியப்படுகிறார். 1950-களில் வெளிவந்த சிவாஜி கணேசன், எம். ஜி. இராமச்சந்திரன் போன்றோரின் பெரும்பாலான சிறந்த திரைப்படங்களுக்கு இவரே இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த 1938-ல், எம்.கே.தியாகராஜ பாகவதர் தயாரித்த சத்தியசீலன் என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி என்ற படத்தில் சன்னியாசி வேடத்தில் நடித்தார்.ஹரிதாஸ், உத்தமபுத்திரன், அம்பிகாபதி, கப்பலோட்டிய தமிழன், அரசிளங்குமரி, துாக்குத்துாக்கி உட்பட 82 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.’மன்மத லீலையை வென்றார், வாழ்ந்தாலும் ஏசும், சிந்தனை செய் மனமே, முல்லை மலர் மேலே, யாரடி நீ மோகனி…’ உட்பட காலத்தால் அழியாத பல பாடல்களை தந்தார். 1963, நவ., 20ல், தன் 53வது வயதில் காற்றில்
கலந்தார்.பல பாடல்களை இன்றும் நம் நாவில் முனுமுனுக்க வைத்த ஜி.ராமநாதன் காலமான தினம் இன்று!