• Wed. Jan 7th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

உடன்கட்டை ஏறுதல்” என்பது, கணவனை இழந்த மனைவி தன் கணவரின் சடலம் தீ மூட்டப்படும் போது அந்தத் தீயில் தன்னை அழித்துக் கொள்ளுதல் தான் உடன்கட்டை ஏறுதல்.

அவ்வாறு இறந்த பெண்மணியை சதிமாதா என்று வணங்கினார்கள். இது வட இந்தியாவில் ராஜபுத்திரர்கள் மற்றும் அரச குடும்பத்தினர் மத்தியிலும் சடங்காகவே இருந்து வந்தது. அதற்கு வேதங்களும், சம்பிரதாயங்களும் ஒரு காரணமாக காட்டப்பட்டன. இந்த கொடும் செயலை தன் கண்ணால் கண்ட சமூக சீர்திருத்தவாதி ராஜாராம் மோகன் ராய், இந்த கொடிய செயலை ஒழிப்பதற்காக தனது பிரம்மசமாஜம் என்கிற சமூக சீர்திருத்த அமைப்பு மூலம் அப்போதைய ஆங்கிலேய ஆட்சியில் வைசிராய் பதவியில் இருந்த போது இந்திய துணை கண்டத்தில் உடன்கட்டை ஏறும் முறையை லார்ட் வில்லியம் பென்டிங்க் துணையோடு சட்டப்பூர்வமாக ஒழித்த தினம் இன்று.

உடன்கட்டை ஏறுதல் முறையையே ஒழித்ததற்கு உறுதுணையாக இருந்தவர் வரிசையில் வில்லியம் கேரி யும் தான். அது மட்டுமல்ல நதியில் பச்சிளம் குழந்தைகளை வீசி பலி கொடுக்கும் மூடநம்பிக்கையை தடை செய்யப்பட்டதற்கும் வில்லியம் கேரி காரணமாய் இருந்தார். இந்த தேசத்தின் இது போன்ற அறியாமை எனும் இருளை போக்கிய மகான்களை நினைவில் வைத்துக் கொள்வோம்.