• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

இன்று வானூர்தி இயலில் பெரும்பங்காற்றிய தியோடர் வான் கார்மான் பிறந்த தினம்

ByKalamegam Viswanathan

May 11, 2023

வானூர்தி இயலில் பெரும்பங்காற்றிய, இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த காற்றியக்கக் கோட்பாளர் தியோடர் வான் கார்மான் பிறந்த தினம் இன்று (மே 11, 1881).

தியோடர் வான் கார்மான் (Theodore von karman) மே 11, 1881ல் ஹங்கேரியில் யூத குடும்பத்தில் பிறந்தார். கல்விபயில ஜெர்மனி சென்று 1908ம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். ஜெர்மனியின் யூதர்களுக்கு எதிரான அரசியல் மாற்றத்தினால் அமெரிக்க நாட்டிற்கு குடிபெயர்ந்தார். தன் வாழ்வின் இறுதிவரை மணம்புரியாதவர். அவர் கோட்டிங்கனில் நான்கு ஆண்டுகள் கற்பித்தார். 1912 ஆம் ஆண்டில் அவர் ஒரு முன்னணி ஜெர்மன் பல்கலைக்கழகமான RWTH ஆச்சென் பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிகல் இன்ஸ்டிடியூட்டின் இயக்குநராக ஒரு பதவியை ஏற்றுக்கொண்டார். ஆர்.டபிள்யு.டி.எச். ஆச்சனில் அவரது நேரம் 1915 முதல் 1918 வரை ஆஸ்திரிய-ஹங்கேரிய இராணுவத்தில் சேவையால் தடைபட்டது, அவர் ஆரம்ப ஹெலிகாப்டரான பெட்ராக்ஸி-கார்மான்-யூரோவெக்கை வடிவமைத்தார்.

போருக்குப் பிறகு அவர் தனது தாய் மற்றும் சகோதரி ஜோசபின் டி கர்மனுடன் ஆச்சென் திரும்பினார். அவரது மாணவர்கள் சிலர் சறுக்குவதில் ஆர்வம் காட்டினர். ரோன்-ரோசிட்டன் கெசெல்செஃப்ட்டின் போட்டிகளை ஏரோநாட்டிக்ஸில் முன்னேறுவதற்கான வாய்ப்பாகக் கண்டனர். கார்மான் ஒரு போட்டி கிளைடரை வடிவமைக்க வொல்ப்காங் க்ளெம்பெரரை ஈடுபடுத்தினார். ஜோசபின் தியோடரை தனது அறிவியலை தேசிய எல்லைகளுக்கு அப்பால் விரிவுபடுத்த ஊக்குவித்தார். செப்டம்பர் 1922ல் இன்ஸ்ப்ரூக்கில் நடைபெற்ற இயக்கவியலில் முதல் சர்வதேச மாநாட்டை அவர்கள் ஏற்பாடு செய்தனர். அடுத்தடுத்த மாநாடுகள் கோட்பாட்டு மற்றும் பயன்பாட்டு மெக்கானிக்ஸ் சர்வதேச ஒன்றியமாக ஏற்பாடு செய்யப்பட்டன. கார்மான் 1930ல் ஆர்.டபிள்யூ.டி.எச். ஆச்சனில் தனது பதவியை விட்டு வெளியேறினார்.

வரிச்சீர் ஓட்டம், கொந்தளிப்பு ஓட்டம், காற்றிதழ், இடைப்படலம் முதலானவற்றில் பெரும்பங்காற்றிதுடன் பாய்ம இயக்கவியல், மீள்மை, வெப்பப் பரிமாற்றம், படிகவுருவியல் போன்ற துறைகளிலும் பங்களித்துள்ளார். கார்மான் பூமியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தின் உயரத்தினை முதன்முறையாகக் கணக்கிட்டார். வளிமண்டலத்தில் 100கி.மீ உயரத்தில் காற்றின் அடர்த்தி மிகக் குறைவானதாக இருக்கும். இங்கு விமானங்களால் பறக்க இயலாது என்றும், அப்படி பறக்க வேண்டுமென்றால் சுற்றுப்பாதை வேகத்தினை மீறிச் செல்ல வேண்டும் என கணக்கிட்டார். 1950ம் ஆண்டு கார்மான் வளிமண்டலத்தி்ன் உயரத்தினைக் கணக்கீடு செய்தார். விமானம் 100 கி.மீ உயத்திற்கு மேல் செல்ல சுற்றுப்பாதை வேகத்தில் செல்ல வேண்டும் என்றார். 100 கி.மீ என்ற உயரத்தினை தோராயமாக எல்லையென வகுத்தார். இதனை சர்வதேச குழு பரிந்துரை செய்தது. இந்த கோடானது வளிமண்டலத்திற்கும், விண்வெளிக்கும் இடையேயான கோடாக கருதப்படுகிறது.

1960ம் ஆண்டு முதல் அமெரிக்க குடிசார் பொறியியலாளர்கள் சமூகத்தினரால் தியோடர் வான் கார்மான் பெயரில் பதக்கம் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றது. செவ்வாயிலும் நிலவிலும் உள்ள விண்கல் வீழ் பள்ளங்களுக்கு தியோடர் வான் கார்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. வானூர்தி இயலில் பெரும்பங்காற்றிய இவர் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த காற்றியக்கக் கோட்பாளராக அறியப்படுகின்றார். இவருடையப் பெயரினை வளிமண்டலத்தின் எல்லைக்கு வைத்து கார்மான் கோடு என்றழைக்கின்றனர். தலைசிறந்த காற்றியக்கக் கோட்பாளர் தியோடர் வான் கார்மான் மே 6, 1963ல் தனது 81வது அகவையில், ஆச்சென், மேற்கு ஜெர்மனியில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.