• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

நாட்டியதுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த ஷோபனாவின் பிறந்தநாள் இன்று!

பாரதிராஜாவின் மண்வாசனை படத்தின் நாயகியாக முதலில் ராதா ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் காதல் ஓவியம், வாலிபமே வா வா படங்களில் தோல்வியால் அவர் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக வேறு ஒரு நாயகி ஒப்பந்தமானார். அப்போது அந்த நாயகியிடம் இருந்து, வித்தியாசமான மறுப்பு வந்தது. பத்தாம் வகுப்புக்கு படிக்கவேண்டும். ஆகவே, படம் வேண்டாம் என்று சொல்லி விலகிக் கொண்டார் அந்த நாயகி. பிறகு ஆஷா கேலுன்னி நாயர் என்ற பெண்ணுக்கு ரேவதி என்று பெயர் வைத்து நாயகியாக்கினார் பாரதிராஜா.

இங்கே பத்தாம் வகுப்புக்காக மண்வாசனை வேண்டாம் என்று சொன்ன நாயகிதான் ஷோபனா. இவர் நடித்த மருதாணி, இது நம்ம ஆளு, சிவா உள்ளிட்ட படங்கள் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் பெயரை பெற்று தந்தது! அதிலும், தளபதி படம் இவருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தது!

நாட்டிய கலையின் மீது கொண்ட, நாட்டம் காரணமாக தனது வாழ்க்கையினை கலைக்காக அர்ப்பணித்தார்! தற்போது, நாட்டிய பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்! இத்தகைய பெருமைகளைக் கொண்ட நாயகி ஷோபனா பிறந்த தினம் இன்று!