இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள திரைப்படம் வாடிவாசல். இந்த படம் ஜல்லிக்கட்டு கதையை வைத்து எடுக்கப்படவுள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது.
இந்நிலையில், நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட்டிங் நடந்துள்ளது. அப்போது அங்கு நடிகர் சூரி சென்றுள்ளார்
அப்போது சூர்யா, வெற்றிமாறனுடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு “அண்ணன் வெற்றிமாறன்- அண்ணன் சூர்யா மிரட்டும் “வாடிவாசல்”ன் டெஸ்ட் ஷூட் . ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வீரம் விளைஞ்ச நம்மண்ணின் பாரம்பரிய விளையாட்டின் பெருமையை உலகறியச் செய்யும் இந்த காவியம். வாடிவாசல் திறக்க நானும் காத்திருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.