• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிக்கொலா தெஸ்லா பிறந்த தினம் இன்று..,

ByKalamegam Viswanathan

Jul 10, 2023

நிக்கொலா தெஸ்லா (Nikola Tesla) ஜூலை 10, 1856ல் குரொவேசிய இராணுவ முன்னரங்கப்பகுதியில் உள்ள சிமில்ஜான் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் சேர்பிய இனத்தவர். ஆஸ்திரியப் பேரரசின் குடிமகனாக இருந்த இவர் பின்னாளில் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மின்னியல், காந்தவியல் ஆகிய துறைகளில் இவர் செய்த புரட்சிகரமான பங்களிப்புக்களினால் இவர் மிகவும் புகழ் பெற்றார். தெஸ்லாவின் காப்புரிமைகளும், கோட்பாட்டுகளும், பன்னிலைமை மின் வழங்கல் முறைமைகள், மாறுதிசை மின்னோட்ட மோட்டார்கள் என்பன உள்ளிட்ட, தற்கால மாறுதிசை மின்னோட்ட மின் வலு முறைமைகளின் அடிப்படையாக அமைந்தன. இவற்றின் மூலம் இவர் இரண்டாம் தொழிற்புரட்சி ஒன்று உருவாவதற்கு உதவினார். இவரது சமகால வரலாற்றாளர்கள் இவரை “இயற்பியலின் தந்தை” என்றும், “இருபதாம் நூற்றாண்டைக் கண்டுபிடித்தவர்” என்றும், “தற்கால மின்னியலின் காப்பாளர்” என்றும் போற்றினர்.

1894 இல் கம்பியில்லாத் தொடர்பு (வானொலி) பற்றிய இவரது செயல்முறை விளக்கம், “மின்னோட்டப் போரில்” இவர் பக்கம் வெற்றிபெற்றது போன்ற நிகழ்வுகளுக்குப் பின்னர், அமெரிக்காவில் பணிபுரிந்த மின்பொறியாளர்களில் மிகச் சிறந்தவர்களில் ஒருவராக தெஸ்லா மதிக்கப்பட்டார். இவரது தொடக்கப் பணிகள் தற்கால மின் பொறியியலுக்கு முன்னோடியாக அமைந்ததுடன், இவருடைய பல கண்டுபிடிப்புக்கள், திருப்பங்களை உண்டாக்குமளவு முக்கியத்துவம் பெற்றவையாக அமைந்தன. அக்கால அமெரிக்காவில், தெஸ்லாவின் புகழ் வேறெந்த கண்டுபிடிப்பாளர் அல்லது அறிவியலாளரின் புகழுக்குக் குறையாது இருந்தது. எனினும் இவரது கிறுக்குத்தனமான போக்கும், அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து இவரது நம்பத்தகாத கூற்றுக்களும், இவர் ஒரு பைத்திய அறிவியலாளர் என்னும் கருத்தை ஏற்படுத்தியது. நிகோலா டெஸ்லாவின் காப்புரிமைக் கண்டுபிடிப்பைப் பயன்படுத்தி, நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து உயர் அழுத்த மின்சாரம் தயார் செய்து பல மைல்கல் தூரத்திற்கு அதைக் கொண்டு செல்ல முடிந்தது. அமெரிக்கத் தொழிற்துறை வளர்ச்சியில் இவருக்குப் பெரும் பங்குண்டு. எக்ஸ்-ரே கதிர், டெஸ்லா சுருள் ஆகியவற்றில் இவர் செய்த கருவிகள் இன்றும் பயன்படுகின்றன.

எடிசனிடம் முதலில் வேலைக்கு சேர்ந்தார். இவர் கண்டுபிடித்த எண்ணற்ற கண்டுபிடிப்புகள் எடிசனின் கணக்கில் சேர்ந்தன. எடிசனின் ஆற்றல் குறைவான நேர்திசை மின்னோட்ட மோட்டாரை தான் சிறப்பாக மாற்றிக் காண்பிக்கிறேன் என சொல்ல, அவர் அப்படி செய்தால் ஐம்பதாயிரம் டாலர் தருவதாக சொல்ல, இவர் முடித்தபொழுது,”அது ஒரு ஜோக்!”என்றார். சம்பளத்தை எடிசன் கொஞ்சமே கொஞ்சம் ஏற்ற கோபமாக வெளியேறினார். மார்கோனி உருவாக்கிய ரேடியோ இவரின் பதினேழு காப்புரிமை செய்யப்பட்ட பொருட்களைகொண்டே உருவாக்கப்பட்டது. நேர்திசை மின்னோட்டத்தை எடிசன் பயன்படுத்தி மின்சார விநியோகத்தை செய்துகொண்டு இருந்தபொழுது எதிர்திசை மின்னோட்டத்தை உபயோகப்படுத்தி அதிக தூரம் மின்சாரத்தை மெல்லிய மின்கம்பிகளின் மூலம் கொண்டு செல்ல முடியும் என தீர்க்கமாக சொன்னார். அவ்வாறே எடிசனை விட்டுப்பிரிந்த பின் உருவாக்கி காட்டினார். அயனி மண்டலத்தில் இருந்து மின் சக்தியை எடுத்து உலக மக்கள் அனைவருக்கும் மின்சக்தியானது தண்ணீர் போல கிடைக்கச் செய்யலாம் என உறுதியாக சொன்னார்.

ரேடார், ரேடியோ எக்ஸ் ரே ஆகியவற்றில் முதலில் ஆய்வுகள் செய்த முன்னோடி இவர். உலகின் முதல் நீர்மின்சார நிலையத்தை உருவாக்கியதும் இவரே. ரிமோட் கண்ட்ரோல், நிலஅதிர்வு அளக்கும் கருவி என இவர் உருவாக்கியவை ஏராளம். எடிசனின் பல்புகள் சந்தையை முற்றுகையிட்ட காலத்தில் அதைவிட பல மடங்கு திறன் மிகுந்த நியான் பல்புகளை இவர் உருவாக்கினார். இவர் தான் ஈட்டிய பணத்தையெல்லாம் ஆய்வுகளிலேயே செலுத்தினார். சாகிறபொழுது கடனாளியாக இறந்து போனார். இறுதிவரை தான் கண்டுபிடிததவற்றின் மூலம் பொருளீட்ட வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு இருந்ததே இல்லை. அறிவியல் மக்களுக்கு பயன்படவேண்டும் என்பதில் தெளிவாக இருந்த தெஸ்லா யாரும் கவனிக்க ஆளில்லாமல் தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார். எளிய மக்களுக்காக சிந்தித்த மின்சார யுகத்தின் தந்தை இவரே. அவரை நினைவுகூரும் விதமாக காந்தப்புல அலகு அவரின் பெயரால் வழங்கப்படுகிறது.

வேதாந்தக் கொள்கைகளின் முடிவுகள் வியக்கத்தக்க அளவில் பகுத்தறிவுக்கு ஒத்திருப்பதாக சுவாமி விவேகானந்தரிடம் கூறிய அப்போதைய தலைசிறந்த விஞ்ஞானிகளில் நிகோலா டெஸ்லாவும் ஒருவர். நிகோலா டெஸ்லா உட்கார இடம் இல்லாமல் மணிக்கணக்காக நின்று கொண்டே சுவாமி விவேகானந்தரின் உரையைக் கேட்டவர். பிப்ரவரி 5, 1896ல் தொழிலதிபர் ஆஸ்டின் என்பவர் இல்லத்தில் சுவாமி விவேகானந்தரும் டெஸ்லாவும் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது சுவாமிஜியின் பக்தையும், பிரெஞ்சு நடிகையுமான சாரா பென்ஹர்ட்டும் உடனிருந்தார். அணு என்பது திடமான, உடைக்க முடியாத , பிரிக்க முடியாத ஒன்று என நியூட்டன் கூறியதையே 19-ஆம் நூற்றாண்டு அறிஞ‍ர்கள் நம்பியிருந்தார்கள். ஆனால் பருப்பொருளும் ஆற்றலும் அடிப்படையில் ஒன்றே. ஒன்றை மற்றொன்றாக மாற்ற முடியும் என்ற வேதாந்தக் கருத்தை நிகோலா முதலில் நம்பாமல் இருந்த போதிலும் தனது இறுதிக்காலத்தில், பருப்பொருளை பொருண்மைச் சக்தியாக மாற்ற இயலும் என்ற சுவாமிஜியின் கருத்தை ஏற்று, தமது முடிவைப் பிரசுரித்தார். அந்தக் கட்டுரையில் 40 ஆண்டுகளுக்கு முன் சுவாமிஜி பயன்படுத்திய அதே சமஸ்கிருத வார்த்தைகளை நினைவு கூர்ந்து எழுதியிருந்தார்.

மிகப்பெரும் விஞ்ஞானியான டெஸ்லா, சுவாமிஜியின் சொற்பொழிவுக் கருத்துகளால் ஆராய்ச்சிப்பூர்வமாகத் தூண்டப்பட்டாலும் அதை உடனடியாக சுவாமிஜியின் முன் நிரூபித்துக் காட்ட இயலவில்லை. எனினும் பிறகு ஐன்ஸ்டீன் என்ற விஞ்ஞானியால் அது (Mass Energy) நிரூபிக்கப்பட்டது. மார்க்கோனிக்கு 1909ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்ட பிறகு, 1915ம் ஆண்டு தாமசு ஆல்வா எடிசன் மற்றும் தெஸ்லாவிற்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு, பகிர்ந்தளிப்பதாக வெளியான தகவல் மிகப்பெரிய பிணக்குகளை உருவாக்கியது. இருவருக்குமான பகைமையையும் இது வளர்த்தது, இருவரும் அப்பரிசினை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவிக்கவில்லை. பரிசினை பகிர்ந்து கொள்ளவும் மறுத்துவிட்டனர். இச்சர்ச்சை ஏற்பட்டு சில ஆண்டுகள் கழித்து, தெஸ்லாவுக்கோ அல்லது எடிசனுக்கோ அப்பரிசு வழங்கப்படவில்லை. இதற்கு முன்பு 1912ம் ஆண்டு, இவருடைய உயர் மின்னழுத்த உயர் அதிர்வெண் ஒத்ததிர்வு மின்மாற்றிகள் பயன்படுத்தி வடிவமைப்பு சுற்றுகளுக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக புரளி வெளியானது. மின்னியல், காந்தவியல் துறைகளில் புகழ் பெற்ற நிக்கொலா தெஸ்லா ஜனவரி 7, 1943ல் தனது 86வது வயதில், நியூயார்க், அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.