• Sat. Jun 3rd, 2023

இன்று டாடா குழுமத்தை தொடங்கிய ஜாம்செட்ஜி டாடா நினைவு நாள்

ByKalamegam Viswanathan

May 18, 2023

டாடா குழுமத்தை தொடங்கிய, நவீன இந்திய தொழில்துறையின் தந்தை, சட்ட வல்லுநர், அரசியல் சிந்தனையாளர், ஜாம்செட்ஜி டாடா நினைவு நாள் இன்று (மே 19, 1904).
ஜம்சேத்ஜீ நசர்வான்ஜி டாட்டா (ஜாம்செட்ஜி டாடா) மார்ச் 3,1839ல் தெற்கு குஜராதில் உள்ள நவசாரி என்ற சிறு நகரத்தில் வாழ்ந்த நசர்வான்ஜி டாடா மற்றும் அவர் மனைவி ஜீவன்பாய் டாடாவிற்கு மகனாகப் பிறந்தார். பார்சி ஜொரோஸ்டிரியன் புரோகிதர்கள் குடும்பத்தில் டாடாதான் முதல் வணிகராகத் திகழ்ந்தார். குடும்பத்தின் குலத்தொழிலான புரோகிதத்தை நசர்வான்ஜி தேர்ந்தெடுத்திருந்தால் வழக்கமான ஒன்றாக இருந்திருக்கும். ஆனால் துணிவுமிக்க இளைஞனான டாடா பாரம்பரியத்தைத் தகர்த்து தன் குடும்பத்திலேயே வணிகத்தில் நுழைந்த முதல் மனிதனாகத் திகழ்ந்தார்.

அவர் தன் வியாபாரத்தை அன்றைய பம்பாயாக இருந்த இன்றைய மும்பையில் ஆரம்பித்தார்.
தனது 14-வது வயதில் தன் தந்தையுடன் மும்பைக்கு வந்த ஜம்சேத்ஜீ டாடா எல்பின்ஸ்டோன் கல்லுாரியில் இன்றைய இளங்கலைப் பட்டத்திற்கு இணையான ‘க்ரீன் ஸ்காலர்’ -ஆக படிப்பை முடித்தார். அவர் மாணவனாக இருக்கும்போதே ஹிராபாய் தாபு என்ற பெண்ணை மணந்தார். 1858-ல் கல்லுாரியிலிருந்து பட்டம் பெற்ற அவர் தனது தந்தை வேலை செய்த வணிக நிறுவனத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். அச்சமயம் 1857 -ன் இந்திய புரட்சிக்காரர்களாக கருதப்பட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அடக்கப்பட்ட கொந்தளிப்பான காலகட்டமாக இருந்தது. 1868ம் ஆண்டு பிரிட்டன் ஆட்சி காலத்தில் ஜாம்ஷெட்ஜி டாடாவால் டாடா குழுமம் ஆரம்பிக்கப்பட்டது. ஜாம்ஷெட்ஜி விதைத்த விதையால் வளர்ந்து ஆலமரமாகி 150 நாடுகளில் கிளை பரப்பி டாடா குழுமம் தற்போது செயல்பட்டு வருகிறது.. டாடா குழுமத்தை கட்டுப்படுத்தும் முழு அதிகாரம் டாடா சன்ஸ் போர்டுக்கு இருக்கிறது.


டாடா குழுமத்தை தொடங்கிய ஜாம்ஷெட்ஜி டாடா கடந்த 1868ம் ஆண்டு முதல் 1904ம் ஆண்டு வரை தலைவராக இருந்தார். அடுத்து டோரப் டாடா, நவ்ரோஜி சக்லத்வாலா, ஜஹாங்கிர் ரத்தோஜி டாடா ஆகியோருக்கு பிறகு ரத்தன் டாடா பொறுப்பேற்றார். தொழில் நடத்துவது என்பதைத் தாண்டி பல சமூகக் கண்ணோட்டங்கள் அவருக்கு இருந்தன. அதில் பிரதானமானது கல்வி வளர்ச்சிக்கு உதவுவது. இதனால் தொழில் தொடங்கி லாபம் வரத் தொடங்கிய பின்னர் 1886ஆம் ஆண்டே ஒரு பள்ளியையும் அவர் தொடங்கினார். டாடா நிறுவனம் அடுத்தது 1903 ஆம் ஆண்டில் நட்சத்திர ஹோட்டல்களையும் தொடங்கியது.


இரண்டாம் உலகப் போர், இந்திய விடுதலைப் போராட்டம், இந்தியாவின் மாபெரும் பிளவு, சுதந்திர இந்தியாவின் சவால்கள், தேவைகள் – ஆகிய அனைத்தையும் நின்று சமாளித்து தனது குழுமத்தை இவர் வழி நடத்தினார். இந்திய நாட்டின் கனவுகளில் டாடா குழுமமும் பங்கேற்பதை இவர் உறுதி செய்தார். இந்தியாவின் முதல் அணு மின்சக்தி திட்டம் உருவாக ஹோமி பாபாவுக்குப் பெரிதும் துணை நின்ற பெருமை இவருக்கு உண்டு. ஜே.ஆர்.டி டாட்டாவின் முயற்சியால் 1939ஆம் ஆண்டு டாட்டா கெமிக்கல்ஸ், 1945ஆம் ஆண்டு டாட்டா மோட்டார்ஸ் மற்றும் டாட்டா இண்டஸ்ட்ரீஸ், 1954ஆம் ஆண்டு வோல்டாஸ் 1962 ஆம் ஆண்டு டாட்டா டீ,1968ஆம் ஆண்டு டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், 1984ஆம் ஆண்டு டைட்டன் இண்டஸ்ட்ரீஸ் என பல்வேறு தொழில்களில் டாடா குழுமம் கால்பதித்தது.

இந்தியாவிலேயே மிகப் பெரிய தொழில் குழுமம். உப்பு முதல் இரும்பு வரை தயாரிக்கும் நிறுவனங்களைக் கொண்டது டாடா குழுமம். பிரிட்டனின் புகழ்பெற்ற ஜாகுவார் கார் நிறுவனம் கூட இப்போது டாடா குழுமத்தின் கையில்தான். 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புக் கொண்ட பாரம்பரியமிக்க தொழில் செழுமை கொண்ட டாடா குழுமம். மும்பையில் உள்ள’பாம்பே ஹவுஸ்’ தான் டாடா குழுமத்தின் தலைமையகம். உலகம் முழுக்க 6 லட்சத்து 60 ஆயிரம் ஊழியர்கள் டாடா குழும நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். டாடா குழுமம் கைவைக்காதத் துறையே இல்லை எனலாம். உப்பு, ஹோட்டல், வாட்சுகள், கார் தயாரிப்பு என எல்லாவற்றிலும் ஈடுபடுகிறது. பிரபல தாஜ் ஹோட்டல்கள் கூட டாடா குழுமத்துக்கு சொந்தமானதுதான்.
டாடா குழுமத்தில் 6 நிறுவனங்கள் மிகவும் பெரியவையும் பாப்புலருமானவை. டாடா மோட்டார்ஸ். ஐடி என்று எடுத்துக் கொண்டால் டாடா கன்சல்ட்டிங் சர்வீசஸ். இந்தியாவின் முன்னணி தெகவல் தொழில் நுட்ப நிறுவனம். லட்சக்கணக்கான சாப்ட்வேர் என்ஜீனியர்களின் கனவு நிறுவனமும் கூட. அதே போல் டாடா ஸ்டீல், டாடா டீ மற்றும் டாடா கெமிக்கல்ஸ் , டாடா டெலிவிஸ்டர்ஸ் ஆகியவை மிக முக்கியமானவை. கடந்த 2000ம் ஆண்டில் இருந்து டாடா குழுமம் வெளிநாட்டு நிறுவனங்களை குறிவைத்து வாங்கத் தொடங்கியது. லேண்ட் ரோவர் கார் தயாரிக்கும் ஜாகுவார் நிறுவனத்தை 2.3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு டாடா குழுமம் வாங்கியது. கடந்த 2007ம் ஆண்டு 12 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு பிரிட்டன் மற்றும் நெதர்லாந்து நாடுகளின் கூட்டு நிறுவனமான ‘கோரஸ் ‘ எக்கு நிறுவனத்தையும் வாங்கியது. அடுத்து பிரிட்டனின் புகழ்பெற்ற டெட்லீ டீ நிறுவனத்தைக் கையகப்படுத்தியது. கடந்த 16 ஆண்டுகளில் சிறியதும் பெரியதுமாக 23 வெளிநாட்டு நிறுவனங்களை டாடா குழுமம் கையகப்படுத்தியுள்ளது.


வேகமாய் ஓடும் நதிகளைப்போல நாடெங்கும் வேகமாய் கால் பதிக்க துடித்தார் ஷாம்ஷட்ஜி நஸ்ஸர்வன்ஜி டாட்டா. ஆனால் விதி ஒத்துழைக்காத நிலையில், மே 19, 1904ல் உடல்நலக்குறைவு காரணமாக தனது 65 வது அகவையில் காலமானார். ஜாம்ஷெட்ஜி டாடா தனது முயற்சிகளால் ‘நவீன இந்தியத் தொழிற்துறையின் தந்தை’ என்று இன்றும் புகழப்படுகிறார். இந்தியாவின் முன்னணி தனியார் தொழில் நிறுவனங்களில் ஒன்றான, டாடா குழுமத்தின் அறக்கட்டளை ரூ.500 கோடி நிதியை கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளது. அதோடு, டாடா குழுமம் தனியாக பிரதமர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1000 கோடி நிதி அளிப்பதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம், டாடா அறக்கட்டளை மற்றும் டாடா குழுமம் ரூ.1500 கோடி நிதி அளிப்பதாக தெரிவித்துள்ளன.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *