• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்த தினம் இன்று!

Byகாயத்ரி

Dec 3, 2021

பீகார் மாநிலம், சிவான் எனும் ஊரில் ஏழ்மை குடும்பத்தில், 1884 டிசம்பர் 3ல் பிறந்தவர் ராஜேந்திர பிரசாத். பொருளியலில் முதுகலை பட்டமும், சட்டத் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார். கோல்கட்டாவில், வழக்கறிஞராகவும் பணியாற்றினார். காந்திய கொள்கையால் ஈர்க்கப்பட்டார். ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் பங்கேற்றதால், 1942ல் கைது செய்யப்பட்டார்;

மூன்றாண்டு சிறைவாசம் அனுபவித்தார். 1946ல் இந்திய அரசியலமைப்பு சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார். மிகப் புகழ் பெற்ற வழக்குரைஞராக பணியாற்றி வந்த இவர், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் கவரப்பட்டு தன் வேலையைத் துறந்து, அவ்வியக்கத்தில் இணைந்தார். 1946ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு அவையின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர் ,1947ல், காங்கிரஸ் தலைவராக செயலாற்றினார்.சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக, 1950ல் பதவியேற்றார். இரு முறை ஜனாதிபதியாக, 12 ஆண்டுகள் பதவி வகித்தது, இன்று வரை சாதனையாக உள்ளது.


நாட்டின் உயரிய, ‘பாரத ரத்னா’ விருது பெற்றவர். 1963 பிப்., 28ல் தன் 79வது வயதில் காலமானார்.டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்த தினம் இன்று!