• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நடிகர் சாருஹாசன் பிறந்த தினம் இன்று..!

Byகாயத்ரி

Jan 5, 2022

இந்தியத் திரைப்பட நடிகர், இயக்குநர், தொலைக்காட்சி நடிகர் மற்றும் ஓய்வுபெற்ற வழக்கறிஞர் சாருஹாசன். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட பல மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வாழ்ந்த டி. சீனிவாசன் -ராஜலட்சுமி இணையரின் மூத்த மகனாக பிறந்தார்.

2014 ஆம் ஆண்டில் குங்குமம் இதழுக்கு எழுதிய கட்டுரையில், “என் தந்தையார் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவருடைய குருவாக விளங்கிய யாகூப் ஹஸன் என்ற பெரியவரின் பெயரை தன் மூன்று பிள்ளைகளுக்கும் நன்றிக் கடனாகப் பெயரிட்டார்”, என தன்னுடைய மற்றும் சகோதரர்கள் சந்திரஹாசன், கமல்ஹாசன் பெயர் காரணம் பற்றி தெரிவித்திருந்தார்.

1987ஆம் ஆண்டில் தபெரனா கதெ என்னும் கன்னடத் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி, சிறந்த நடிகருக்கான இந்திய அரசு திரைப்பட விருது, சிறந்த நடிகருக்கான கர்நாடக அரசு திரைப்பட விருது ஆகிய விருதுகளை வென்றுள்ளார் சாருஹாசன். இவர், நடிகர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.பல திறமைகளை உள்ளடக்கிய சாருஹாசன் பிறந்த தினம் இன்று..!