• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நடிகர் ரகுவரன் பிறந்த தினம் இன்று!

Byகாயத்ரி

Dec 11, 2021

வில்லனா ஒரு காலத்தில் கொடுக்கட்டி பறந்து தன் வித்தியாசான குரல் வளத்தாலும் தனித்துவமாக ஜொலித்த நடிகர் ரகுவரன்.கேரளாவில் உள்ள கொல்லங்கோடு என்ற இடத்தில், 1958 டிசம்பர் 11ம் தேதி பிறந்தவர், ரகுவரன். தந்தையின் தொழில் நிமித்தம் காரணமாக, கோவைக்கு குடிபெயர்ந்தார்.

இளங்கலை பட்டம் பெற்ற ரகுவரன், 1982ல் வெளியான ஏழாவது மனிதன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். கூட்டுப்புழுக்கள், கை நாட்டு, மைக்கேல் ராஜ் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனாலும், வில்லன் நடிகராகத் தான் அவர் ஜொலித்தார்.

தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என, 300க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார். நடிகை ரோகிணியை திருமணம் செய்தார். பின், விவாகரத்து செய்து கொண்டனர்.போதைப் பழக்கத்திற்கு அடிமையானதால் இவரின் சினிமா வாழ்க்கையும், உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. 2008 மார்ச் 19ல் தன் 50வது வயதில் உயிரிழந்தார்.நடிகர் ரகுவரன் பிறந்த தினம் இன்று!