• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்திற்கு தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் நிதி உதவி..

Byகாயத்ரி

Aug 6, 2022

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த விமல் ராஜ் என்ற கபடி வீரர்,கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்ற விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக கபடி விளையாடிக் கொண்டிருக்கும்போதே உயிரிழந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகிய நிலையில் தமிழகத்தை இந்த சம்பவம் உலுக்கியது. அவருக்கு பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வந்தனர். அது மட்டுமல்லாமல் உயிரிழந்த கபடி வீரரின் குடும்பத்திற்கு பலரும் நிதி உதவி அளித்து வருகிறார்கள். அவ்வகையில் உயிரிழந்த கபடி வீரரின் குடும்பத்தை நேரில் சந்தித்த நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ், அவர்களுக்கு ஆறுதல் கூறி 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தார். அதன் பிறகு வீட்டில் இருந்த விமல்ராஜ் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.