• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தனது சகோதரிக்கு நியாயம் கிடைக்க, பெற்றோருடன் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் – சகோதரர் சுப்பராமன்

Byஜெ.துரை

Jul 28, 2023

விழுப்புரம் மாவட்டம் செம்மார் பகுதியை சேர்ந்தவர் சுகந்தி (25). இவர் கோயம்பேடு சேம்மாத்தம்மன் நகரில் உள்ள தனது தம்பி வீட்டில் தங்கியிருந்து, தலைமை செயலக காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த 22 ஆம் தேதி வழக்கம் போல பணிக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பிய சுகந்தி சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் காவல்துறை விசாரணையில், சுகந்தி திருப்பூர் ஆயுத படையில் பணிபுரிந்து வந்த காவலர் ஒருவரை காதலித்துள்ளார். கடந்த சில நாட்களாக சுகந்தியின் காதலன் அவரிடம் பேசாமல் இருந்ததால், மன உளைச்சலில் இருந்த சுகந்தி, தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து, காதலனுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஆனால் இதுவரை காவல்துறை தனது சகோதரிக்கு நியாயம் கிடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், குற்றம் செய்தவர் காவல்துறையை சேர்ந்தவர் என்பதால் அவரை தப்பிக்க முயற்சி செய்வதாகவும் தெரிகிறது. ஆகையால் அவரை அழைத்து தனது சகோதரியின் செல்போனில் உள்ள அனைத்து ஆதாரங்களையும் திரட்டி மறைக்காமல் தனது சகோதரியை ஏமாற்றிய காவலரான விஷ்ணு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டதாக இறந்து போன காவலர் சுகந்தியின் சகோதரர் சுப்பராமன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.