• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

விவசாயிகளின் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றம்

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி தலைநகர் டெல்லியில் உள்ள எல்லை யில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் பயனாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளிலேயே 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்பட்டன.

போராட்டத்தை கைவிட்டு விவசாய அமைப்புகள் பேச்சு வார்த்தைக்கு வர வேண்டும் என்று மத்திய அரசு அழைப்பு விடுத்தது. ஆனால் போராட்டத்தை வாபஸ் பெற மறுத்த விவசாய சங்கங்கள், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் குழு அமைத்து கடந்த சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே டெல்லியில் போராடும் விவசாய சங்கத்தலைவர் குல்வந்த் சிங் சந்து நேற்று கூறுகையில், ‘நாங்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளும் கிட்டத்தட்ட நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது, இருப்பினும் இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும்’என்று தெரிவித்தார்.