• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

யோகி பாபுவின் அடுத்த படம்

பிரபல மலையாள இயக்குநர் ரெஜிஷ் மிதிலாவின் இயக்கத்தில், யோகிபாபு நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது.

மலையாள திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் இயக்குநர் ரெஜிஷ் மிதிலா, தற்போது தமிழில் யோகிபாபுவை நாயகனாக வைத்து ஒரு புதிய படத்தை உருவாக்குகிறார்.இந்தப் படத்தில் யோகிபாபு மற்றும் ரமேஷ் திலக் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியன், ஹரீஷ் பேரடி, குள்ளப்புள்ளி லீலா, நாக விஷால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

எழுத்து, இயக்கம் – ரெஜிஷ் மிதிலா, தயாரிப்பாளர்கள் – ரெஜிஷ் மிதிலா, லிஜோ ஜேம்ஸ், தயாரிப்பு நிறுவனம் – தி கிரேட் இந்தியன் சினிமாஸ், ஒளிப்பதிவு – கார்த்திக் எஸ் நாயர், படத் தொகுப்பு – சைலோ, இசையமைப்பாளர் – பரத் சங்கர், ஆடை வடிவமைப்பாளர் – குவோச்சாய் S, ஒப்பனை – கோபால், நிர்வாக தயாரிப்பு – சுனில் ஜோஸ், தயாரிப்பு மேலாளர் – ஜெயபாரதி, முதன்மை இணை இயக்குநர் – நிதிஷ் வாசுதேவன், இணை இயக்குநர் – கார்த்தி, இணை இயக்குநர் – அகில் V.மாதவ், உதவி இயக்குநர்கள் – பிரஜின் M.P., தண்டேஷ் D.நாயர், வந்தனா, விளம்பர வடிவமைப்பாளர் – சிவகுமார், ஸ்டில்ஸ் – ஜோன்ஸ், மக்கள் தொடர்பு – ஜான்ஸன்.

இத்திரைப்படம் முழுக்க, முழுக்க ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகவுள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று எளிய பூஜையுடன் துவங்கியது.தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக சென்னை, ராஜஸ்தான் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் நடத்த படக் குழு திட்டமிட்டுள்ளது.