• Mon. Dec 2nd, 2024

அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்.., தமிழக அரசின் புதிய உத்தரவு..!

Byவிஷா

Jul 10, 2023

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில்கின்ற மாணவ, மாணவிகளுக்கு உடல்நலன் சார்ந்த அளவீடுகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கண்பார்வை, மூக்கு மற்றும் இடுப்பளவு போன்ற உடல்நலன் சார்ந்த குறியீடுகளை ஆய்வு செய்து பட்டியல் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு அருகில் அல்லது தொலைவில் உள்ள பொருட்களை பார்ப்பதில் குறைபாடு உள்ளதா, கண்கள் சிவந்துள்ளதா, புத்தக வாசிப்பில் வரிகளை தவற விடுகிறார்களா அல்லது மாறுகண் குறைபாடு உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். மாணவர்களின் இடுப்பு நீளத்தை பதிவு செய்ய வேண்டும். மாணவர்களின் உயரம் மற்றும் எடையை குறிப்பிட வேண்டும். பற்களில் பழுப்பு நிற கரை உள்ளதா, பாதங்கள் வளர்ந்துள்ளதா என மொத்தம் 42 வகை குறைபாடுகள் குறித்து ஆய்வு நடத்தி அவற்றை செயலியில் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *