• Wed. Apr 22nd, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

குரூப்-1, 2, 4 தேர்வு பாடத்திட்டங்களில் மாற்றமா?- டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ByP.Kavitha Kumar

Feb 6, 2025

குரூப்-1, 2, 4 தேர்வு பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவலுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1, குரூப் 2 மற்றும் 2ஏ, குரூப்-4 போட்டித்தேர்வுகள் வாயிலாக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. இதற்கான, பாடத்திட்டம், டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், குரூப் 1, குரூப் 2 மற்றும் 2ஏ, குரூப்-4 போட்டித் தேர்வுகளான புதிய பாடத்திட்டங்கள் கடந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், போட்டித்தேர்வுகளின் பாடத்திட்டங்கள் மாற்றப்பட இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலானது. ஆனால், இந்த தகவலை டிஎன்பிஎஸ்சி மறுத்துள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி கூறுகையில்., ‘2025-ம் ஆண்டு நடைபெற உள்ள குரூப்-1, குரூப்-2 மற்றும் 2ஏ, குரூப்-4 ஆகிய போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே நடைபெறும். பாடத்திட்டம் மாற்றப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் செய்தியை தேர்வர்கள் நம்ப வேண்டாம்’ என தெரிவித்துள்ளது.