தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், கால்நடைத்துறையில் ஆராய்ச்சியாளர் மற்றும் மேலாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கால்நடை பராமரிப்பு பணியில் ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் மற்றும் மேலாளர் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு பதவிகளுக்கான காலி பணியிடங்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான எழுத்து தேர்வு டிசம்பர் 9 மற்றும் டிசம்பர் 10 ஆகிய தேதிகளில் மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற உள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த தேர்வுக்கான நுழைவு சீட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் மேலும் கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.ஸி தேர்வு : ஹால் டிக்கெட் வெளியீடு..!
