• Sun. May 5th, 2024

தமிழகத்திலே குமரி மாவட்டத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகம்…

தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு உள்ள மாவட்டங்களாக அண்மையில் சுகாதார துறை எடுத்த ஆய்வில் வெளியாகி உள்ள அறிக்கையில் முதல் இடத்தில் கன்னியாகுமரி மாவட்டம் உள்ளது. இதற்கு அடுத்த மாவட்டங்களாக திருப்பத்தூர், ஈரோடு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் புற்றுநோயின் தாக்கம் இருந்தாலும், குமரியில் சராசரியாக 1_லட்சம் பேரில் 37_பேருக்கு புற்றுநோய் உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை நாகர்கோவில் மாநகராட்சி மாதந்திர கூட்டம் நேற்று (நவம்பர் 28)ம் தேதி நடந்த போது, மேயர் மகேஷ் ஒரு எச்சரிக்கை தகவலாக அறிவித்ததோடு, குமரி மாவட்டத்தில் 18_வயது முதல் உள்ள அனைவரும் புற்றுநோய் பாதிப்பு பற்றிய பரிசோதனையை கட்டாயமாக செய்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ்யை கூட்டம் முடிந்த பின், செய்தியாளர்களிடம் தெரிவித்தவை.

தமிழக அரசு தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு பரவியுள்ளது,அதில் குமரி மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட நோயின் தாக்கம் ஒரு லட்சம் பேரில் 37 _பேர் சம்பந்தப்பட்ட நோயின் தாக்குதலுக்கு உட்பட்டவர்கள் என்ற ஆய்வின் அடிப்படையில், நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ‘கேன்சன் ஸ்கிரீனிங்’ அழைப்பிதழ் அனைத்து வீடுகளுக்கும் வழங்க இருக்கிறது. அந்த அழைப்பிதழுடன் சென்று புற்றுநோய் குறித்த பரிசோதனை செய்து கொள்ளலாம். சிகிச்சை தேவைப்படுகிறவர்களுக்கு ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பினால், காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை அளிக்கப்படும். அரசின் மக்கள் நல உணர்வில் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை, குமரியில் 18 வயதை கடந்த ஒவ்வொரு வரும் நமது கடமை என்ற உணர்வோடு பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என மேயர் மகேஷ் கேட்டுக் கொண்டவர் மேலும் தெரிவித்தது.

குமரி மாவட்டத்தில் கடற்கரை ஓரங்களில் கதிர் வீச்சு நிறைந்த பகுதி,அதன் காரணமாக புற்றுநோய் பரவுவதற்கு காரணம் என்ற நிலையில், நமது நாட்டை வெள்ளையர்கள் ஆண்ட போது. அந்த காலத்தில் இங்கு வந்த கிறிஸ்தவ மிஷனரிகள். நம் மாவட்ட மக்களின் கல்விக்காக பல பள்ளிகளை,கல்லூரிகளை உருவாக்கியவகள், மக்கள் உடல் நலம் காக்கும் மருத்துவ முறைகளையும் நிறுவினார்கள்.

குமரியில் புற்றுநோய் கதிர் வீச்சு தன்மையை உணர்ந்து நோயை தடுக்கும் வகையில், நெய்யூரில் ஒரு புற்றுநோய் மருத்துவ மனையை, மற்றும் ஆராய்ச்சி அமைப்பையும் அன்றே தொலை நோக்கு பார்வையோடு தொடங்கியது பாராட்டுக்குரியது எனவும் தெரிவித்தவர்.

நெய்யூர் புற்றுநோய் மருத்துவ மனை அதன் நோய் தீர்க்கும் பணியில் 150_ ஆண்டுகளை கடந்து மத பேதம் அற்ற மனித நேய பணியை தொடர்ந்து செய்து வருவது பாராட்டுக்குரியது எனவும் மேயர் மகேஷ் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *