• Sat. Apr 20th, 2024

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பால் குடம்,, பறவை காவடி எடுத்தும் நேர்த்திக்கடன்

ByKalamegam Viswanathan

Feb 6, 2023

தைப்பூசம், பெளர்ணமி திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அழகு குத்தி பால் குடம்,, பறவை காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் – மணிக்கணக்காகவரிசையில் காத்திருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.
தைப்பூசம், தை பெளர்ணமி திருநாளை முன்னிட்டு அறுபடை வீடுகளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தைப்பூசத் திருநாளை முன்னிட்டு முருகனின் திருத்தலங்கள் அனைத்திலும் தைப்பூசம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் அனைத்து நாள்காட்டிகளிலும் இன்று தைப்பூசம் என குறிக்கப் பட்டிருந்ததால் பக்தர்களின் கூட்டம் இன்று அதிக அளவில் காணப்படுகிறது இன்று அறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தைப்பூசத்தை முன்னிட்டும் தை பௌர்ணமியை முன்னிட்டும் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர் காலையில் நேர்த்திக்கடன் நிறைவேறிய பக்தர்கள் காவடி சுமந்தும், அழகு குத்தியும் பறவை காவடி எடுத்தும் பால்குடம் ஏந்தியும் கிரிவலம் வந்து அவர்கள் கொண்டு வந்த பால் மூலம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது திருக்கோவிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து காலை ஐந்து மணி முதல் வழிபாட்டிற்காக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். திருப்பரங்குன்றம்,மதுரை திருமங்கலம், சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர் பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததால் மணிக்கணக்காக வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யக்கூடிய சூழல் உருவானது.இதனால் வரிசையில் நின்ற பக்தர்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கூட்டம் அதிக அளவில் இருந்ததால் காத்திருக்க முடியாத சூழலில் உள்ள பக்தர்கள் கட்டணம் செலுத்தி தரிசனம் செய்யும் பகுதியில் குவிந்ததால் விரைவு தரிசன வழியிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருக்கும் நிலை உருவானது கூட்டத்தை கட்டுப்படுத்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தைப்பூச திருநாளை முன்னிட்டு பல ஆண்டுகளாக சாமி தரிசனம் செய்து வருவதாகவும் தங்களது வேண்டுதலை முருகன் நிறைவேற்றி தருவதாகவும் அதனால் தொடர்ந்து கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வதாகும் தெரிவித்த பக்தர்கள் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு கூட்டம் அதிகரித்துள்ளதாகவும் ஒரு புறம் மக்கள் கூட்டம் அதிகரித்தாலும் கூட்டத்தில் நின்று காத்திருந்து சாமி தரிசனம் செய்தது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *