மதுரை அவனியாபுரம் சுற்றுச்சாலையில் ஜாஸ் டிம்பர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வாகைக்குளம் கிராமத்தை சேர்ந்தவேலுச்சாமி என்பவரின் மகன் ராமநாதன் (வயது 32) சம்பவ இடத்திலேயே பலியானார்.
ராமநாதன் திருமங்கலத்திலிருந்து ரிங்ரோடு வழியாக அவனியாபுரம் ஜாஸ் டிம்பர் அருகே செல்லும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார். போக்குவரத்து புலானய்வு பிரிவு போலீஸார் வழக்குபதிவு செய்து ராமநாதன் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.