தனியார் பள்ளிகளில் பெண்கள் விடுதியை காலி செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் மதுரையில்.தனியார்.பள்ளி தலைவர் தமிழக அரசுக்கு.வேண்டுகோள்
மதுரை குயின் மீரா சர்வதேச பள்ளியில் சிபிஎஸ்சி தேசிய தர வரிசையில் தேசிய அளவில் ஆறாவது இடத்தையும் மாநில அளவில் மூன்றாம் இடத்தையும் மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
2021 .22 .ல்நடைபெற்ற கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் திவ்யா ஸ்ரீ மற்றும் ஸ்ரீநிதி ஆகிய மாணவிகள் 500க்கு 495 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதல் இடத்தையும் மாநில அளவில் மூன்றாவது இடத்தையும் தேசிய அளவில் ஆறாவது இடத்தையும்.பெற்றுசாதனை படைத்தனர்
. மேலும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிவபாக்கியா என்னும் மாணவி 490 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் .பள்ளியின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் ஒட்டுமொத்த மதிப்பெண் விகிதம் பத்தாம் வகுப்பில் 85% ஆகும் 12 ஆம் வகுப்பில் 82 சதவீதமாகவும் உள்ளது.
அவர்களைப் பாராட்டி பள்ளி தலைவர் சந்திரன் பேசியதாவது
எங்கள் பள்ளி தரவரிசை மற்றும் மதிப்பெண்களை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படுவது இல்லை. மாணவர்களுக்கு மகிழ்ச்சியான கல்வியை வழங்கி வருகிறோம். மாணவர்களுக்கு அவர்களின் தனித்திறமையை வளர்க்கவும் உடல் ரீதியான மன ரீதியான திறமையை வளர்க்கவும் பயிற்சி அளித்து வருகிறோம். அதன் ஒரு வகையான வெளிப்பாடு இப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் மாநில அளவில் தேசிய அளவில் இடங்களை பிடிக்க காரணமாக இருந்து வருகிறது.. தற்போது எங்கள் பள்ளியின் ஆசிரியர்களின் முறையான போதனையால் பள்ளி மாணவர்கள் சிறந்த மதிப்பெண்களை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழக அரசு பெண்கள் விடுதியை உடனே மூட வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதை தமிழக அரசுமறு பரிசீலனை செய்ய வேண்டும். கல்வி நிலையங்களில் உள்ள பெண்கள் விடுதிகளை காலி செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும்.மேலும் கல்வி நிலையங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாற்று நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம்.. கட்டமைப்பு வசதிகள் உள்ள கல்வி நிலையங்களுக்கு பெண் விடுதிகள் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.