எல்.ஐ.சி. கோல்டன் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கு நாளை (ஜனவரி 14) வரை விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏழை மாணவர்களுக்கு எல்ஐசி சில்வர் ஜூப்ளி அறக்கட்டளை உதவி தொகையை அறிவித்துள்ளது. தகுதியான மாணவர்கள் ஜனவரி 14-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு எல்ஐசி பிரிவு மையத்திற்கும் 30 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். பத்தாம் வகுப்பில் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று ஐடிஐ மற்றும் டிப்ளமோ என ஏதேனும் ஒரு தொழிற்கல்வி படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த உதவி தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.