• Mon. Dec 9th, 2024

சென்னை முழுவதும் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக கடைகள் விடுமுறை..!

Byவிஷா

Jan 13, 2024

ஜனவரி 16 திருவள்ளுவர் தினம், ஜனவரி 25 வள்ளலார் நினைவுதினம், ஜனவரி 26 குடியரசு தினம் ஆகிய மூன்று நாட்களுக்கு சென்னை முழுவதும் டாஸ்மாக் கடைகள், எலைட்பார்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது..,
எப்எல் 2 உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், எப்எல் 3 உரிமம் கொண்ட ஓட்டல் பார்கள் மற்றும் எப்எல் 3ஏ, ஏஏ,மற்றும் எப்எல் 11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் இந்த 3 நாட்களில் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். அந்த மூன்று நாட்களும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.