• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் அருகே பெண்ணை முன்னிறுத்தி செயின் பறித்த மூன்று பேர் கைது..,

ByS.Ariyanayagam

Jul 3, 2026

திண்டுக்கல் அருகே பெண்ணை முன்னிறுத்தி வாலிபரை அடித்து 5 பவுன் தங்கச் செயின் பறித்து சென்ற வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் வத்தலகுண்டு, பைபாஸ் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் பெண்ணை முன்னிறுத்தி இருசக்கர வாகனத்தில் வந்த அனுமந்தராயன்கோட்டையை சேர்ந்த பாலு என்பவரை அடித்து 5 பவுன் தங்க செயினை பறித்து சென்றது தொடர்பாக தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட S.P.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் புறநகர் DSP.சங்கர் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் எஸ்பி தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட முத்தழகுபட்டியை சேர்ந்த கிஷோர் வேளாங்கண்ணி(26), சகாயராஜ்(32), சரத்குமார்(27) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.