தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக மதுரை மாவட்ட பொதுக்குழு மற்றும் 43-வது மாநில மாநாடு ஆலோசனைக் கூட்டம் மதுரை அவனியாபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து விக்கிரம ராஜா கூறியதாவது:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பாக வருகின்ற 43-வது வணிகர் தின மாநில மாநாடு, விழிப்புணர்வு எழுச்சி மாநாடாக திருவாரூரில் நடைபெற இருக்கிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரை மாவட்டத்திலிருந்து 5,000 வணிகர்கள் மாநாட்டில் பங்கேற்போம் என்பதை தீர்மானித்திருக்கிறோம்.
குறிப்பாக இந்த மாநாட்டில் பல்வேறு பிரகடன தீர்மானங்கள் எடுக்க இருக்கிறோம். அனைத்து மாநிலத்தினுடைய தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள். ஏறக்குறைய இதுவரை 28 மாநிலங்கள் வருவதாக ஒப்புதல் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த மாநில மாநாட்டில் சிறப்புமிகு பிரகடன தீர்மானமாக சாமானிய வணிகர்களைப் பாதுகாப்பதற்கு, கார்ப்பரேட் கம்பெனி ஆன்லைன் வர்த்தகத்தின் பிடியிலிருந்து வியாபாரிகளைப் பாதுகாப்பது எப்படி என்பதை ஆய்வு செய்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரகடன தீர்மானத்தை எடுக்க இருக்கிறோம்.
சிலிண்டர் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு குறித்த கேள்விக்கு:

சிலிண்டர், கேஸ் இதெல்லாம் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்று மதியம் 3:00 மணி அளவிலே சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் மற்றும் அதனுடைய அதிகாரிகளோடு ஒரு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்று முடிந்திருக்கிறது.
அந்தக் கூட்டத்தில் இன்னும் ஒரு நான்கு, ஐந்து நாள் தாக்குப்பிடிக்குமாறு சில சிலிண்டர் கம்பெனிகள் சொல்லி இருக்கிறார்கள். அதே வேளையிலே மத்திய அரசுக்கு மாநில அரசு ஒரு ஆய்வுக் கூட்டத்தை நடத்தப்பட்டு, அதில் தீர்வு காணக்கூடிய சூழலை எடுத்திருக்கிறார்கள். அதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோன்று, இன்று கிராமப்புறங்களில் ஹோட்டலில் நிறைய ஹோட்டல்கள் கட்டை அடுப்பு, கறி போடுற அடுப்பு, கட்டை போட்டு ஸ்டீமர் (steamer) இருக்கு. இதெல்லாம் நடைமுறையில் இருப்பதால் தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் பெருநகரங்கள் – சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் அந்த ஸ்டீமரே கேஸை நம்பி இருக்கிறார்கள். அவங்கள எல்லாம் தொழில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுவிடும். குறிப்பாக தோசை கிடைக்காது மக்களுக்கு. வேகும் பொருள் ஓரளவுக்கு இட்லி, ரைஸ், சாதங்கள் மட்டும் கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் இதில் ஹோட்டல் மட்டும் பாதிக்கப்படலை. அந்த கேஸ் சிலிண்டர் கொண்டு வரக்கூடிய வாகனம் ஓட்ட முடியாது. அதில் பணியாற்றக்கூடிய டிரைவர், லேபருக்கு (labour) ஓட்ட முடியாது. ஒரு செயின் (chain) சங்கிலி மாதிரி பல ஆயிரக்கணக்கான மக்கள் இதில் பாதிக்கப்படுவார்கள். இப்பதான் கேஸ் இவ்வளவு அத்தியாவசியமான பொருளாக இருப்பது தெரிகிறது என்பது இப்பதான் ஆய்வு செய்ததில் தெரியப்படுகிறது.
நிறைய ஃபேக்டரிகள் (factories), உற்பத்தி செய்யக்கூடிய ஃபேக்டரிகள் தடைபடுகிறது. மருத்துவமனைக்கு கட்டாயமாக கேஸ் தேவைப்படுகிறது. பல சூழலில் தவித்துக் கொண்டிருக்கிறோம். உலக நாடுகள் எல்லாம் எப்படி இந்தப் போர் முடியுமா என்று சிந்தனை எழுந்து கொண்டிருக்கிறது. போர்ச் சூழலில் இருந்து விடுவித்து நம்மைக் காப்பாற்றுவதற்கு இறைவன் தான் அருள் புரிய வேண்டும் என்பதை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கேட்டுக் கொள்கிறது.
மதுரை விமான நிலையம் குறித்த கேள்விக்கு:

மதுரை விமான நிலையத்தை சர்வதேச அந்தஸ்து கொண்டு வந்திருக்கிறார்கள். அடுத்த கட்டமா எக்ஸ்போர்ட் (export) எல்லாம் அதிக அளவுல நடக்கும்னு சொல்றாங்க அதாவது விமான நிலையம் சர்வதேச அளவிலே மதுரை அமல்படுத்தியதற்கு மத்திய அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதே வேளையில் இங்கு செயல்படுத்தக்கூடிய ஏரோட்ரோம் (aerodrome) என்பது இன்னைக்கு சாதாரணமான மக்கள் பிளைட் (flight) ஏறக்கூடிய சூழலை உருவாக்கி இருக்கிறார்கள்.
ஆனால் கட்டணம் என்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. மதுரை, தூத்துக்குடி விமான நிலையம் எடுத்துக் கொண்டால் இந்தியாவிலேயே அதிக கட்டணம் வசூலிக்கக்கூடிய மாவட்டம் – முதலில் தூத்துக்குடி, அதன்பிறகு மதுரை. இந்தச் சூழல் இருக்கிறது. ‘ஒன் மேன் ஷோ’ (one man show) ஆக ஒரு கம்பெனி இருக்கின்ற காரணத்தினால் அந்த நிலை இருக்கிறது மத்திய அரசு அதை ஆய்வு செய்து மேலும் சில கம்பெனி விமானங்களை அனுப்ப வேண்டும். அதே மாதிரி இரவு நேர பிளைட் – தூத்துக்குடியில் 21-ல் இருந்து இரவு 8:00 மணி வரை சொல்லியிருக்காங்க. அது 9:30 மணி அல்லது 9:00 மணிக்கு இருந்தால் மிக சௌகரியமாக இருக்கும். ஏனென்றால் நிகழ்ச்சியும் நிறைவு செய்த பிறகு அவர் சென்னைக்கு போக வசதியாக இருக்கும்.
இதை ஏதுவாக அமைத்திட வேண்டும். நவீன முறையிலே அரசு செயல்படுகின்ற பொழுது அதைப் பாதுகாப்பதோடு, முறைப்படுத்தி எப்பொழுதுமே மக்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கேட்டுக் கொள்கிறது என கூறினார்.



