• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நீலகிரி வனங்களில் கண்டறியபட்ட ஆயிரக்கணக்கான மூலிகைச்செடிகள்

நீலகிரி மாவட்ட வனங்களில் கண்டறியபட்ட ஆயிரக்கணக்கான மூலிகைச்செடிகள்.
வனங்கள் காப்பாற்றபட்டால் மட்டுமே மருத்துவ குணம் வாய்ந்த இந்த தாவரங்கள்
காப்பாற்றபடும்.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் 55 சதவீதம் வனங்களை உள்ளடக்கிய மாவட்டம்.இங்குள்ள வனங்களில் அரிய வகை மூலிகை செடிகள் உள்ளதை பல்வேறு தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள்
ஆய்வு செய்து உறுதி படுத்தியுள்ளனர்.


இதுகுறித்து தாவிரவியல் ஆராய்ச்சியாளர் எஸ்.ராஜன் தெரிவிக்கையில்;2550 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமையபெற்றுள்ள நீலகிரி மாவட்டத்தில் 3,000 வகை தாவரங்கள் இருப்பதாக தாவரவியல் வல்லுநர்கள் கணக்கெடுப்பு செய்து பதிவு செய்துள்ளனர்.

இந்த 3000 வகை தாவரங்களில் 1500 வகை தாவரங்கள் மருத்துவ குணங்கள் நிறைந்தாக உள்ளது.அதிலும் 20 சதவீத தாவரங்கள் வெளிநாட்டு தாவர வகைகளை சேர்ந்தது.வெளி நாடுகளின் காலநிலைச்சூழல் நீலகிரி மாவட்டத்தின் காலச்சூழலோடு ஒத்து போவதால்,


இங்கு நன்கு வளருகிறது. இதில் கூர்ந்து கவனிக்கதக்க விஷயமாக பார்த்தால் உயிர்காக்கும் மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தபடும் மூலிகை இங்கு காணப்படுகிறது உதாரணமாக மாரடைப்பு
நோய்க்கு மருந்தான டிஜிட்டாலிஸிஸ், நீலகிரி மாவட்ட மூலிகை பண்ணைகள் அதிகளவில் உள்ளன.மேலும் நீலகிரி மாவட்டத்தில் பண்டைய காலம் தொட்டு வாழ்ந்து வரும் பழங்குடிகள் பயன்படுத்தி மருத்துவ குணம் வாய்ந்த மருந்துகளை இன்று பலரும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

மகத்துவம் வாய்ந்த நீலகிரி மலைகளையும், வனங்களையும் பாதுகாக்கும் பட்சத்தில் இங்குள்ள அரிய வகை மருத்துவ மூலிகை செடிகள் எதிர்கால தலைமுறையினருக்கு சென்றடையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை என தெரிவித்தார்.