• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

இனி இதெல்லாம் அரசுப் பேருந்தில் செய்யக்கூடாது…

Byகாயத்ரி

Aug 19, 2022

தமிழக அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெண் பயணிகளை ஆண் பயணிகள் முறைத்துப் பார்க்க கூடாது. கூச்சலிடக்கூடாது, விசிலடிக்க கூடாது.
பெண் பயணியிடம் அத்துமீறல் செய்தால் ஆண் பயணியை வாகனத்தில் இருந்து இறக்கிவிடலாம்.

நடத்துனர் எச்சரிக்கையை மீறும் ஆண் பயணியை வழியில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்கலாம். ஆண் பயணிகள் கூச்சலிடுதல், கண் அடித்தல், விசில் அடித்தல், சைகை உள்ளிட்டவற்றை செய்யக் கூடாது. போட்டோ எடுக்க கூடாது என பல்வேறு அறிவுறுத்தல்கள் கண்டக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளிலும் மேற்கண்டவாறு திருத்தம் செய்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.