• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இது தான் லாஸ்ட் சான்ஸ் .. மல்லையாவுக்கு எச்சரிக்கை

பிப்ரவரி 24ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென கடன் ஏய்ப்பாளரான தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர் மீதான கடன் ஏய்ப்பு வழக்கை 2017 முதல் விசாரித்த உச்ச நீதிமன்றம், பலமுறை உத்தரவிட்டும் விஜய் மல்லையா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் லண்டன் தப்பிச் சென்று விட்ட நிலையில், அவரை நாடு கடத்துவதற்கான வழக்கு பிரிட்டனில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வழக்கில் நேரில் ஆஜராக விஜய் மல்லையாவுக்கு இதுவே கடைசி வாய்ப்பு என்றும் தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.