• Sat. Feb 15th, 2025

இது பாராட்டு விழா அல்ல, குடும்ப விழா.. நெகிழ்ச்சியில் திருமா..!

By

Aug 19, 2021

மதுரையில் எழுச்சித்தமிழர் பிறந்தநாள் விழா பாராட்டு விழா பொன்னழகன் மகாலில் நடைபெற்ற விழாவில் நெல்லை முபாரக் திருமுருகன்காந்தி, ஹென்றி திபேன், பசும்பொன் பாண்டியன் அகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டி பேசினார்கள்.


ஆண்டுதோறும் ஆகஸ்ட் 17 இல் பிறந்த நாளை கொண்டாடுவது நடைபெற்று வருகிறது சென்னையில்தான் நிறைவுக்கு வந்த நிலையில் இந்த ஆண்டு மதுரையில் நடக்க வேண்டும் என்று கட்சியினர் வேண்டுகோள் விடுத்ததையொட்டி பிரமாண்டமான இந்த விழா நடைபெற்றது. இந்த விழாவில் விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது..,
இந்த விழாவின் வாயிலாக உங்களை சந்திப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இது பாராட்டு விழா அல்ல திருமாவளவன் குடும்ப விழா. அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 26, 27 வயதில் மதுரைக்கு வந்து 32 ஆண்டுகளாக கடந்துவிட்டது. இரண்டு தலைமுறையும் கடந்துவிட்டது. காற்றோடு தலைநிமிர்ந்து இருக்கிறேன். நான் முடிவெடுப்பதை விடுதலை சிறுத்தை கட்சியினர் நடைமுறைப்படுத்த வேண்டும். தொண்டர்கள் அனைவரும் நன்றி விசுவாசத்துடன் இருக்கிறார்கள் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

கட்சித் தலைவராக இருப்பவர்கள் எந்த அதிகாரத்தையும் முடிவு எடுப்பவராக இருக்க வேண்டும் அண்ணன் எடுத்த முடிவு ஏற்போம் அண்ணன் நல்ல முடிவை எடுப்பார் என்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்பிக்கை எப்போதும் வைத்திருக்கும் சிறுத்தைகள் அமைப்பு மட்டும் குறைப்பு அல்ல. அதற்கு நீங்கள் தரும் ஒத்துழைப்பு தான் முழுமுதற் காரணம்.


நான் விமானத்தில் வரும்போது எங்கு பார்த்தாலும் திருபாம்பரம் உள்ளது. ஒரு நண்பர் கேட்டார் அவர் ஜாதியை பற்றி இழிவாக கேட்பவர் தான். எந்த ஊர் போனாலும் உன் பெயர் தான் உள்ளது. நீங்கள் அவர்களுக்கு என்ன கொடுக்கிறீர்கள். நான் அவர்களுக்கு கை கொடுக்கிறேன். நாங்கள் பணம் கொடுத்தாலும் இது போன்ற வரவேற்பு இல்லையே என்றும் தெரிவித்தார். அந்த காலத்தில் விருந்து யாரையும் எதிர்க்காமல் திருமா வளர்த்திருக்கிறார் நாம் நாலுபேரை சட்டமன்றம் அனுப்பியது நமது இலக்கு அல்ல, நம்மை வழிநடத்த கூடிய வெற்றி. நம்மை வலிமைப் படுத்துவதற்கான இடைக்கால வெற்றி. நமது 10 ஆண்டுகள் காத்திருந்தால் தான் முழு வெற்றி இருக்கும். பெரியார் எடுத்த தடியை வைத்து ஓடினார். அதன் பின்னர் அண்ணா அதன்பின் கலைஞர் சென்றார் தற்போது முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் செல்கிறார்.


ஒருவர் ஏதாவது கட்சியில் சேர்ந்து பதவியை வாங்கிக்கொண்டு பொறுப்புகளை பெற்று இருப்பார். ஆனால் அவர்கள் உரிமைகளை மீட்க வேண்டும் என்றும் கோவிலுக்குள் சாமி கும்பிட கூட மறுத்த சமுதாயத்தினருக்கு தற்போது அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியிருப்பதன் மூலம் பெரியாரின் கனவு நனவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் அடுத்த கட்ட போராட்டம் பெண்களும் அர்ச்சகராகலாம் என்ற ஒரு கோரிக்கையை தமிழக முதல்வரிடம் அளித்துள்ளேன். இதுதான் அரசியல் பயணம் என்று பேசினார்.