• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா..,

ByS. SRIDHAR

Feb 22, 2026

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும் இக்கோவிலூர் கும்பாபிஷேகம் கடந்த மாதம் தான் நடைபெற்றது இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த கோயிலில் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது வழக்கம்.

இந்த ஆண்டு மாசி திருவிழா வரும் 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 9ஆம் தேதி தேர்தல் விழா நடக்கிறது. மாசி திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக அம்மனுக்கு பூச்சொரிதல் விழா என்று வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்று காலை முதலே அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்காவடி பறவை காவடி அக்னி சட்டி ஏந்தி தங்களுடைய நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்.