• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் இன்று தை தெப்ப திருவிழா

Byகாயத்ரி

Jan 7, 2022

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆண்டுதோறும் தை தெப்ப திருவிழா 12 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு தை தெப்ப திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கொடியேற்றத்தையொட்டி இன்று மாலை சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளுகிறார்கள். அப்போது கொடிமரத்திற்கு புனிதநீர் கொண்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பின்னர் கொடியேற்றப்படுகிறது.

மேலும் கொரோனா தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் அனைத்து உற்சவங்களும் கோவில் வளாகத்திலேயே நடைபெறுகிறது. ஆண்டுதோறும் தை தெப்ப உற்சவத்தன்று மாலை திருவானைக்காவல் டிரங்க் ரோடு அருகே உள்ள ராமதீர்த்த குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி தெப்ப உற்சவம் கண்டருளுவார்கள்.

ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்தாண்டு தை தெப்ப உற்சவம் வருகிற 17-ந்தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.