மதுரை மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. இந்த மருத்துவமனை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைவதால், இதன் கட்டுமானப் பணிகளைத் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, இன்று நேரில் பார்வையிட்டார். குறிப்பாக, 2026 மற்றும் 2027-ஆம் ஆண்டுகளுக்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள சூழலில், தற்போதைய கள நிலவரத்தை அவர் ஆய்வு செய்தார்.

முதற்கட்டமாக நடைபெற்று வரும் கல்வி வளாகம் (Academic Block), நிர்வாகக் கட்டடம் மற்றும் வெளிநோயாளிகள் பிரிவு (OPD) ஆகியவற்றின் பணிகளை அவர் பார்வையிட்டார்.
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா கூறுகையில்:

மதுரை மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. இந்த மருத்துவமனை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைவதால், இதன் கட்டுமானப் பணிகளைத் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, இன்று நேரில் பார்வையிட்டார். குறிப்பாக, 2026 மற்றும் 2027-ஆம் ஆண்டுகளுக்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள சூழலில், தற்போதைய கள நிலவரத்தை அவர் ஆய்வு செய்தார்.
முதற்கட்டமாக நடைபெற்று வரும் கல்வி வளாகம் (Academic Block), நிர்வாகக் கட்டடம் மற்றும் வெளிநோயாளிகள் பிரிவு (OPD) ஆகியவற்றின் பணிகளை அவர் பார்வையிட்டு அதிகாரிகளுடன் விவரம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் குறித்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் அடிப்படையில் நேரில் வந்து இயக்குனர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து ஆய்வு செய்து அடிப்படையில் சில செய்திகளை தெரிந்து கொண்டுள்ளோம்.
எய்ம்ஸ் மட்டும் இல்லாமல் அதை சுற்றி இருக்கும் பகுதிகளையும் முன்னேற்றும் என்று எதிர் பார்க்கிறோம். அருமை அண்ணன் எடப்பாடியாரும் பிரதமரும் சேர்ந்து தொடங்கி வைத்த இந்த திட்டம் நிச்சயம் நடைபெறும். தொடர்ந்து 21 கட்டிடங்கள், 11 மாடி கட்டிடங்கள் என ஒரு சேர நடைபெற்று வருகிறது. ராமநாதபுரத்தில் பயிலும் மாணவர்கள் இங்கு தங்குவதற்கான விடுதிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

தொழிற்சாலைகளுக்கு இருக்கும் சிஎஸ்ஆர் நிதி போல இதற்கு CE நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதை சுற்றி உள்ள கிராமங்கள் மற்றும் அதற்கான கட்டமைப்புகளை முன்னேற்றுவது முக்கியமான விஷயம் அதிலும் இந்த எய்ம்ஸ் மருத்துவமனை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளது. சுற்றி உள்ள கிராமங்கள் வளர்ச்சி அடையும்.
மாவட்ட ஆட்சியர் தயாராக இருந்தால் சிஇ நிதியை கொடுக்க தயாராக இருப்பதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. எய்ம்ஸ் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்திலேயே பிரதமரும் முன்னாள் முதல்வரும் உரையாற்ற இருக்கிறார்கள்.
பிரதமர் இந்த மாதம் எயிம்சை திறந்து வைக்க தகவல் இல்லை. அவர் கட்டிடத்தை திறந்து வைக்க வருவார் என்பது உண்மையான செய்தி அல்ல.
கட்டிடப் பணிகள் மிகச் சிறப்பாக திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2600 ஊழியர்கள் இங்கு தங்கியிருந்து பணிபுரிகிறார்கள். மார்ச் இறுதிக்குள் ஹாஸ்டல் முடிக்கப்படும்.
கட்டிடங்கள் வாணலாவிய கட்டிடங்களாக உயர்ந்து வளர்கின்றது அதற்காக நாம் வாழ்த்துவோம். இந்த இடத்திற்கு கட்டுமானமே வித்தியாசமான முறையில் நடைபெறும் வீடு கட்டுவது போல் இல்லை. நம்பிக்கையூட்டும் அளவிற்கு செய்து இருக்கிறார்கள்.
குறிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். இந்த பணி முடியும் போது இந்த இடமே வித்தியாசமாக இருக்கும் மதுரை மாவட்டத்திற்கு கிடைத்த அரிய வாய்ப்பு அது முழுமை அடைய வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. இன்னும் அதிகபட்சம் போனால் இரண்டு ஆண்டுகள் சொல்லியிருக்கிறார்கள் 2028 ஆம் ஆண்டு முழுமை அடைந்து பயன்பாட்டிற்கு வரும்.
ஏற்கனவே 220 ஏக்கருக்கு மேல் கைப்பற்றப்பட்டு பணிகள் நடைபெறுகிறது தேவைப்பட்டால் விரிவாக்கம் செய்யப்படும்.
இப்போது இருக்கும் அரசு ஆட்சிக்கு வந்து ஐந்தாண்டு முடியப்போகிறது ஒரு மருத்துவ கல்லூரியும் கொண்டுவரவில்லை. தொடங்கி வைத்தவர்களே முடித்து வைக்கும் சூழல் ஏற்படும்.
35வகையாக பிரிக்கப்பட்டு ஐந்து வகை முடிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் இறுதி ஆண்டு பிடிக்குமானவர்கள் மதுரையில் வந்து தங்கி பழகுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பணி சுறுசுறுப்பாக நடைபெறுகிறது. தீயணைப்பு, குடிநீர் என அனைத்து வகையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. நிதி ஒதுக்கப்பட்டு இன்னும் அருகில் இருக்கும் கிராமங்களுக்கு நிதி கொடுக்கப்படவில்லை. பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் போன்ற திட்டங்களை கொடுக்க தயாராக இருப்பதால் சொல்லியிருக்கிறார்கள். 20 கிலோ மீட்டருக்குள் இருக்கும் பள்ளிகளுக்கு வளர்ச்சித் திட்டங்கள் கொடுக்க தயாராக இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு மதுரை எய்ம்ஸ் குறித்து நான்கு முறை கடிதம் எழுதி இருக்கிறேன். அவர்கள் எனக்கு பதில் கொடுத்திருக்கிறார்கள். 34 பிளாக் மொத்தம் வரவுள்ளது. மொத்தத்தில் 50 சதவீதம் முடிந்துள்ளது.










