• Wed. Dec 11th, 2024

திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் மகாலட்சுமி காலனியில் குடிபோதையில் வாலிபர் கிணற்றில் விழுந்து பலி

ByKalamegam Viswanathan

Feb 12, 2024

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகர் மகாலட்சுமி காலனி ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சங்கையா இவரது மகன் மகேஸ்வரன் (வயது 28) .இவர் செல்போன் கடை வைத்துள்ளார் இவரது தாயார் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டார் இதன் காரணமாக இவர் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி தினமும் குடித்து வந்தார்.

இதனால் இவரது அக்கா அவரை இன்று திட்டியுள்ளார் இதில் விரக்தி அடைந்த மகேஸ்வரன் அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து திருப்பரங்குன்றம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் மீட்பு படையினர் அங்கு சென்று கிணற்றிலிருந்து மகேஸ்வரனின் உடலை மீட்டனர்.

திருநகர் போலீசார் இறந்த மகேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

. மேலும் திருநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை வருகிறார்கள்.
இறந்த மகேஸ்வரன் ஏற்கனவே மூன்று முறை தூக்கு போட்டு சாக முயன்று அருகிலுள்ளவர் காப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.