மதுரை மாவட்டம் சோழவந்தானில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் 63வது பிறந்த நாளையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி சோழவந்தான் முகாம் சார்பில் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

பேரூர் செயலாளர் குமணன், முகாம் செயலாளர் சுரேந்திரன், பொறுப்பாளர் குருநாதன் முன்னிலை வகித்தனர் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஊர்ச்சேரி சிந்தனை வளவன், சோழவந்தான் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், சோழவந்தான் பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் சத்ய பிரகாஷ் ஆகியோர் அசைவ அன்னதானத்தை தொடங்கி வைத்தனர். இதில் செம்மொழியான், 17 வது வார்டு அதிமுக கவுன்சிலர் சண்முக பாண்டியராஜா, கார்த்தி, ஜெயச்சந்திரன், மார்க்கண்டேயன், திலீப் ,பஞ்சு ,வேலு, சுரேந்திரன், பாரதி ராஜேஷ் உள்ளிட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.